"TN 14-- 0277" விஜய்யின் பிரச்சார பஸ் முதல் கார் வரை ஒரே நம்பர் பிளேட்! உருக வைக்கும் சென்டிமென்ட்
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் பயன்படுத்தும் கார் முதல் அவருடைய பிரச்சார வாகனம் வரை அனைத்துக்கும் ஒரே மாதிரியான பதிவு எண்ணை வைத்திருக்கிறார். இதன் பின் ஒரு சென்டிமென்ட் இருப்பதாக சொல்கிறார்கள்.
திரைத்துறையில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவருடைய சம்பளம் ஒரு படத்திற்கு ரூ 100 கோடிக்கு மேல் இருக்கும் என சொல்லப்படுகிறது. சினிமாவில் உச்சத்தில் இருக்கும் தான் எதற்காக அரசியல் கட்சியை தொடங்கினேன் என்பதை கூட விஜயே ஒருமுறை விக்கிரவாண்டியில் தெரிவித்திருந்தார்.

அந்தளவுக்கு அவருக்கு சினிமா கைகொடுத்தது. அது போல் அரசியல் கட்சியை கடந்த 2024 ஆம் ஆண்டு தொடங்கிய விஜய், 2026 இல் தமிழக சட்டசபை தேர்தலை முன்னிறுத்தி பயணித்து வருகிறார். தேர்தலுக்கு இன்னும் 7, 8 மாதங்களுக்கு இருக்கும் நிலையில் தற்போது அவர் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார்.
யாருடைய டீம்
விஜய் பாஜகவின் பி டீம், திமுகவின் பி டீம் என எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் அதையெல்லாம் கண்டுக் கொள்ளாமல் அவர் பாட்டுக்கு பயணிக்கிறார். 2026 தேர்தலில் தவெகவின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து அவர் சினிமாவுக்கு முழுக்கு போடவும் உள்ளதாக சொல்லப்படுகிறது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ஜனநாயகன் என்ற படம் ரிலீஸாகிறது. இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்த படங்கள் எதிலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகவில்லை.
கார் டூ பஸ்
இந்த நிலையில் நடிகர் விஜய், இன்று முதல் தமிழகம் முழுவதும் பிரச்சார பயணத்தை தொடங்கியிருக்கிறார். திருச்சியில் இருந்து பயணத்தை தொடங்கும் விஜய், தனது கார் முதல் பிரச்சார வாகனம் வரை ஒரே நம்பர் பிளேட்டை பயன்படுத்தி வருகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.
சொகுசு கார்கள்
விஜய்யிடம் ரோல்ஸ் ராய்ஸ், உள்ளிட்ட கார்கள் இருக்கின்றன. கடந்த ஓராண்டில் மட்டும் 3 கார்களை வாங்கியுள்ளாராம். அதில் பிஎம்டபிள்யூவில் ஈவி வாகனமும், லெக்சஸ் எல்.எம்.கார், டொயோட்டாவின் Vellfire ஆகிய வாகனங்களை வைத்துள்ளார்.
பிரச்சாரம்
இந்த நிலையில் தமிழகம் முழுக்க பிரச்சாரம் செய்ய ஒரு பேருந்தையும் அவர் வாங்கியிருக்கிறார். இப்படி விஜய் வாங்கிய கார்கள், பேருந்து வரை அனைத்துக்கும் ஒரே நம்பர் பிளேட்டை வைத்துள்ளார்.
0277 கார் எண்
அதாவது 0277 என்ற நம்பரை வைத்துள்ளார். TN 14 என்பது பொதுவாக இருக்கிறது. அதன் பிறகு வரும் ஆங்கில எழுத்துகள் மட்டுமே மாறியிருக்கின்றன. அவரது பிரச்சார வாகனத்தின் நம்பர் பிளேட் எண் TN 14 AS 0277 என்பதாகும். அவரது வாகனங்களில் 14-02-77 என்ற எண் தவறாமல் இருக்கிறது.
விஜய் சென்டிமென்ட்
இந்த நம்பருக்கு பின்னால் விஜய்யின் சென்டிமென்ட் இருக்கிறதாம். அதாவது இந்த நாளில்தான் விஜய்யின் தங்கை வித்யா பிறந்தாராம். தங்கை மீது அதிகம் பாசம் கொண்ட விஜய், தனது மகளுக்கு வித்யாவை மாற்றி திவ்யா என பெயர் வைத்திருந்தார். அது போல் தனது வாகனங்களில் 14-02-77 என்ற எண்ணை வைத்துள்ளார் என்கிறார்கள். அவரது வாகனங்களின் பதிவு எண்கள்- TN 14 AH 0277, TN 14 AL 0277, TN 14 AM 0277 ஆகியவை அவருடைய கார்களின் எண்களாகும்.












Click it and Unblock the Notifications