மெசேஜ் செய்த 10 நிமிஷத்தில் லைனில் வந்த சிரஞ்சீவி காரு.. ரூ 45 லட்சம் உதவி.. கலங்கிய பொன்னம்பலம்
மெசேஜ் செய்த பத்தே நிமிஷத்தில் எனக்கு ரூ 45 லட்சம் வரை உதவி செய்து என் உயிரை காப்பாற்றியவர் நடிகர் சிரஞ்சீவி- நடிகர் பொன்னம்பலம் உருக்கம்
சென்னை: நான் மெசேஜ் செய்த 10 நிமிடங்களில் ரூ 45 லட்சம் வரை உதவி செய்து என் உயிரை நடிகர் சிரஞ்சீவி காப்பாற்றினார் என வில்லன் நடிகர் பொன்னம்பலம் உருக்கமாக தெரிவித்தார்.
தமிழ் சினிமாவில் நடிகர்கள் ரஜினி, கமல், அஜித், விஜய், விஜயகாந்த், விக்ரம் உள்ளிட்டோருடன் வில்லனாக நடித்தவர் நடிகர் கபாலி என்கிற பொன்னம்பலம். இவர் சில ஆண்டுகளாக சினிமாவில் காணவில்லை.
இந்த நிலையில் திடீரென பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். ஆனால் திரையில் பார்த்த பொன்னம்பலத்திற்கும் பிக்பாஸில் பார்த்த பொன்னம்பலத்திற்கும் எத்தனை வித்தியாசம். இவரா கொடூர வில்லனாக நடித்தவர் என சந்தேகம் கொள்ள வைக்கிறது.

பொன்னம்பலம்
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு திடீரென பொன்னம்பலம் மருத்துவமனையில் செயற்கை சுவாசத்துடன் சிகிச்சை பெற்ற வீடியோ வைரலானது. இதை பார்த்த ரசிகர்கள் அவரின் தோற்றத்தை கண்டு மனம் கலங்கினர். இந்த வீடியோவை அவருடன் நடித்த நடிகர்கள் கண்களில் படும் வரை பரப்பினர். சிறுநீரகம் செயலிழந்து பொன்னம்பலம் சிகிச்சை பெற்று வந்தார்.

கண்ணீர் மல்க
தனக்கு உதவுமாறு பொன்னம்பலம் கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டார். இதையடுத்து அவருக்கு பலர் உதவ முன் வந்தனர். சரத்குமார், கமல், சிரஞ்சீவி, தனுஷ், அர்ஜுன், விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், பிரபுதேவா, இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்டோர் உதவி செய்திருந்தனர். இந்த நிலையில் தனது அக்கா மகனின் சிறுநீரகத்தை தானமாக பெற்று பொன்னம்பலம் தற்போது உயிர் பிழைத்துள்ளார்.

யூடியூப் சேனல்
இந்த நிலையில் அவர் தற்போது யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறுகையில் எனக்கு உடல்நிலை சரியில்லாத போது எனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி. என் ரசிகர்களுக்கும் நன்றி. நிறைய உதவி செய்தாலும் எனக்கு மேலும் உதவி தேவைப்பட்டதால் நண்பர் ஒருவரின் உதவியுடன் தெலுங்கு மெகாஸ்டார் சிரஞ்சீவியின் போன் நம்பரை பெற்றேன்.

உடல்நிலை பாதிப்பு
அவருக்கு என் உடல்நிலை சரியில்லை. தங்களால் இயன்ற உதவியை எனக்கு செய்யுங்கள் என ஒரே ஒரு மெசேஜ் அனுப்பினேன். உடனே பத்தே நிமிடத்தில் எனக்கு சிரஞ்சீவி போன் செய்தார். சரி ஏதோ ஒரு லட்சமோ 2 லட்சமோ உதவி செய்வார் என்றுதான் நான் நினைத்தேன். அவர் போனில் ஹாய் பொன்னம்பலம் எப்படி இருக்கீங்க. உங்களுக்கு என்ன ஆச்சு, கிட்னி பிரச்சினையா, நான் இருக்கிறேன். கவலைப்படாதீர்கள். உங்களால் ஹைதராபாத் வர முடியுமா என கேட்டார்.

ரூ 200 கூட கேட்கவில்லை
நான் உடனே அண்ணா குடும்பம் எல்லாம் இங்கே இருக்கிறார்கள் என்றேன். உடனே சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு செல்லுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். சரி டயாலிசிஸ் செய்ய உதவி செய்வார் என நினைத்தேன். ஆனால் என்னிடம் என்ட்ரி ஃபீஸ் ரூ 200 கூட வாங்கவில்லை. கிட்டதட்ட 45 லட்சம் வரை செலவானது. அனைத்தையும் அவரே கவனித்து கொண்டார். ராம் சரணின் மனைவி உபாசனா என்னை நேராக வந்து பார்த்து சிரஞ்சீவி சொன்னதாக சொல்லி என்னை நன்றாக பார்த்துக் கொண்டார். கடவுள் போல் எனக்கு சிரஞ்சீவி உதவினார்.

உதவியோ உதவி
எனக்கு இன்று வரை சரத்குமார் உதவி செய்து வருகிறார். கமல்ஹாசன், தனுஷ் உள்ளிட்டோர் எனது உடல்நிலை சரியானதும் நடிக்க வாய்ப்பு கொடுப்பதாக கூறினார்கள். தற்போது தாடி வைத்து நடிக்கலாம் என்பதற்காக தாடி வளர்த்து வருகிறேன். எனக்கு அப்பா, அண்ணன் என எந்த கேரக்டர் கொடுத்தாலும் நான் ரெடிதான். மக்கள் என்னை நிச்சயம் ஏற்பார்கள் என உருக்கமாக நடிகர் பொன்னம்பலம் தெரிவித்தார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications