எங்களை இந்தி பேச சொல்ல நீங்கள் யார்? உங்கள் அஜெண்டா என்ன?.. அமித்ஷாவுக்கு பிரகாஷ் ராஜ் கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: என்ன மொழி பேச வேண்டும் என சொல்ல நீங்கள் யார் என மத்திய அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்ற அலுவல் மொழி கமிட்டியின் 37 ஆவது கூட்டம் இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். அவர் கூறுகையில் ஆங்கில மொழிக்கு பதிலாக இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல.. சர்வதேச மொழியான ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை ஏற்க வேண்டும். அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது.

70 சதவீத நிகழ்ச்சி நிரல்

70 சதவீத நிகழ்ச்சி நிரல்

வெவ்வேறு மொழிகளை பேசும் மாநிலங்களிலுள்ள மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும் போது அது இந்திய மொழியில் இருக்க வேண்டும். இந்தி மொழியின் முக்கியத்துவத்தை அதிகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அமைச்சரவையின் 70 சதவீத நிகழ்ச்சி நிரல் இந்தியில் தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.

தென்னிந்தியாவில் கண்டனம்

தென்னிந்தியாவில் கண்டனம்

இதற்கு தென்னிந்தியாவில் கண்டனங்கள் வலுத்துள்ளன. பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை மக்கள் மறக்கடிப்பதற்காக இது போல் ஹிந்தி மொழி பிரச்சினையை மீண்டும் மத்திய அரசு கொண்டு வந்ததாக சொல்லப்படுகிறது. அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

ஏ.ஆர். ரஹ்மான்

ஏ.ஆர். ரஹ்மான்

அது போல் அமித்ஷா இந்தியை இணைப்பு மொழியாக கற்க வேண்டும் என தெரிவித்த கருத்து குறித்து ஏ.ஆர். ரஹ்மான் கூறுகையில் தமிழ்தான் இணைப்பு மொழி என ஒரே வரியில் பளீச்சென பதில் அளித்தார். அது போல் எத்தனை மாநிலங்களில் எத்தனை சதவீதத்தில் தமிழ் பேசப்படுகிறது என்பது குறித்து வரைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இந்த நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜும் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு கடும் காட்டமான பதிலை சொல்லியுள்ளார்.

பிரகாஷ் ராஜ்

பிரகாஷ் ராஜ்

அவர் கூறுகையில் எங்கள் மீது இந்தியை திணிக்காதீர்கள், பன்முகத்தன்மையை நாங்கள் நேசிக்கிறோம். எங்கள் தாய்மொழியை நேசிக்கிறோம். நாங்கள் என்ன மொழி பேச வேண்டும் என சொல்வதற்கு நீங்கள் யார்? உங்கள் அஜென்டா என்ன? என மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு பிரகாஷ் ராஜ் அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+