சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"தெலுங்கன், வந்தேறி".. ஆஹா.. சீமானை பார்த்ததுமே.. பாஜக ராதாரவி ஒரே போடு.. அவங்களுக்கும் "குட்டு" போல

சீமானை புகழ்ந்து நடிகர் ராதாரவி பேசிய பேச்சு இணையத்தில் ஷேர் ஆகி வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: "என்னை வைத்துக் கொண்டீர்கள் என்றால் அந்த கட்சிக்கு நல்லது.. விட்டால் எனக்கு நல்லது.. எந்த பதவியையும் எதிர்பார்த்து எந்த கட்சிக்கும் நான் போவதில்லை" என்று ராதாரவி பேசிய பேச்சு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. அத்துடன், சீமானின் அரசியலை பாராட்டி ராதாரவி பேசியிருந்ததும், மிகுந்த கவனத்தை ஈர்த்து வருகிறது.

எல்லா கட்சிகளிலும் ஒரு ரவுண்டு அடித்துவிட்டு, தற்சமயம், பாஜகவில் ஐக்கியமாகி நடிகர் ராதாரவி.. ஆனால், பாஜகவில் இவருக்கு எந்த பதவியும் தரப்படவில்லை..

கட்சியில் சேர்ந்த உடனேயே காயத்ரி ரகுராம் போன்றோருக்கெல்லாம் பதவி கிடைத்த நிலையில், ராதாரவி வெறும் பிரச்சாரங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தார்.

ஏம்மா ராஜலட்சுமி புருஷனை கூடவே கூட்டிட்டு வராதேம்மா.. இவங்கலாம் தொல்லை.. ராதாரவி பேச்சால் சர்ச்சை ஏம்மா ராஜலட்சுமி புருஷனை கூடவே கூட்டிட்டு வராதேம்மா.. இவங்கலாம் தொல்லை.. ராதாரவி பேச்சால் சர்ச்சை

 உச்சிக்குளிருதே

உச்சிக்குளிருதே

ஆனால், நிறைய சினிமா விழாக்களில் பங்கேற்கிறார்.. அந்த விழாக்களில் சான்ஸ் கிடைக்கும்போதெல்லாம் திமுகவை விமர்சித்தும் வருகிறார்.. ஆனால், இப்போது, தனக்கு பதவி இல்லாதது குறித்து, பாஜகவையே லேசாக டேமேஜ் செய்து பேசியிருக்கிறார்.. விழா ஒன்றில் ராதாரவி பேசியபோது, சீமானை உச்சிக்குளிரும் அளவுக்கு பாராட்டி தள்ளிவிட்டார்.. இந்த விழாவுக்கு சீமானும் வந்திருந்தார்.. ராதாரவி பேசப்பேச, சீமான் கைகளை தட்டி ரசித்து கொண்டேயிருந்தார்.. அதன் சுருக்கம்தான் இது:

 விஜயகாந்த்

விஜயகாந்த்

"விஜயகாந்த், வாகை சந்திரசேகரன், எஸ்எஸ் சந்திரன், பாண்டியன், தியாகு, ராதாரவி என நாங்கள் 6 பேரும் ஒரே டீமாக இருந்தோம்.. ஆனால் என்னமோ அதில், திருஷ்டிபட்டுவிட்டது.. ஆளுக்கொரு பக்கம் போய்ட்டாங்க.. எப்பவுமே ஆவலுடன் எதிர்பார்ப்பது சீமான் பேச்சைதான்.. ஏன் என்றால், சீமான் ஒருவர்தான், மனதில் பட்டதை பேசுகிறார்.. அவர் பேசுவதற்கு, நான் உட்பட யாராலுமே எதிர்பாயின்ட்டை பேச முடிவதில்லை.. யாரையாவது அப்படி எதிர்த்து பேச வேண்டும் என்று நான் நினைப்பேன்.. ஆனால், சீமான் முந்திவிடுகிறார்.. அந்த வகையில் அவர் அறிவாளி..

 சூப்பிரண்டண்ட்டு

சூப்பிரண்டண்ட்டு

அகநானூறு, புறநானூறு பற்றியெல்லாம் பெரியவர்கள் பேசுகிறார்கள் என்கிறார்கள்.. அதேபேச்சைதானே சீமானும் ஞாபகமாக பேசுகிறார்.. என் அப்பா கால நடிகர் கிடையாது சீமான்.. ஆனாலும், சீமான் படித்தவர்.. அதனால்தான் விளக்கமாக பேசுகிறார்.. என் அப்பாவும் யாருக்கும் பயப்பட மாட்டார்.. அவருக்கு எழுத படிக்க தெரியாது.. அவர் கையெழுத்து போட்டதே சிறைச்சாலையில் எம்ஆர் ராதா என்று கையெழுத்து போட மட்டும்தான்... இப்படித்தான் ஒருநாள் ஜெயிலிசூப்பிரண்ட்டிடம் சென்ற எம்ஆர்ராதா, "ஏன்யா, இவர் என்ன முன்னாடி இங்கே சூப்பிரண்டண்ட்டா இருந்தவரா? என்று கேட்டார்.. உடனே அந்த அதிகாரி திரும்பி பார்த்தால், அங்கே திருவள்ளுவர் படம் இருந்தது.. திருவள்ளுவரை தான் எம்ஆர் ராதா அப்படி கேட்டுள்ளார்..

 யாரு சாமியாரு

யாரு சாமியாரு

ஒரு ரகசியம் இப்போ சொல்றேன், தந்தை பெரியாரை என் அப்பாவுக்கு அறிமுகப்படுத்தியது பேரறிஞர் அண்ணா.. திருச்சியில் அன்றைய தினம் தங்கியிருந்த பெரியாரிடம், என் அப்பாவை அறிமுகப்படுத்தி வைத்தார் அண்ணா.. உடனே என் அப்பா, "என்னய்யா சாமியார் மாதிரி இருக்காரு" என்று சொல்லிவிட்டார்.. இதைக்கேட்டு பதறிப்போன அண்ணா, அவர் சாமியார் இல்லை, அவர்தான் ராமசாமி நாயக்கர் என்றார்.. அதோடு சரி.. அப்போதிருந்து கடைசிவரை பெரியாருடன்தான் என் அப்பா பயணித்தார்.. அண்ணா பிரிந்து வந்து திமுக ஆரம்பிக்கவும், அவரை என் அப்பாவுக்கு பிடிக்காம போயிடுச்சு.

வந்தேறியா

வந்தேறியா

ஒரு ரகசியம் இப்போ சொல்றேன், தந்தை பெரியாரை என் அப்பாவுக்கு அறிமுகப்படுத்தியது பேரறிஞர் அண்ணா.. திருச்சியில் அன்றைய தினம் தங்கியிருந்த பெரியாரிடம், என் அப்பாவை அறிமுகப்படுத்தி வைத்தார் அண்ணா.. உடனே என் அப்பா, "என்னய்யா சாமியார் மாதிரி இருக்காரு" என்று சொல்லிவிட்டார்.. இதைக்கேட்டு பதறிப்போன அண்ணா, அவர் சாமியார் இல்லை, அவர்தான் ராமசாமி நாயக்கர் என்றார்.. அதோடு சரி.. அப்போதிருந்து கடைசிவரை பெரியாருடன்தான் என் அப்பா பயணித்தார்.. அண்ணா பிரிந்து வந்து திமுக ஆரம்பிக்கவும், அவரை என் அப்பாவுக்கு பிடிக்காம போயிடுச்சு.

 விட்டால் நல்லது

விட்டால் நல்லது

கேரளாவை நாம யாராவது ஆள முடியுமா? கர்நாடகாவை யாராவது ஆள முடியுமா? மகாராஷ்டிராவில் நாம யாராவது போய் ஆள முடியுமா? ஏன் தமிழ்நாட்டை மட்டும் தமிழன் ஆள முடியவில்லை? இதைதான் சீமான் கேட்கிறார்.. இந்துக்களை திட்டிக் கொண்டே, இந்த நாட்டின் தலைவர்கள் உருவாகிறார்கள் என்றால், இங்கே முட்டாள் யார் என்றால், இந்துக்கள்தான்.. உடனே நான் வேற கட்சியை சார்ந்தவன் என்பார்கள்.. என்னை வைத்துக் கொண்டீர்கள் என்றால் அந்த கட்சிக்கு நல்லது.. விட்டால் எனக்கு நல்லது.. எந்த பதவியையும் எதிர்பார்த்து எந்த கட்சியும் நான் போவதில்லை என்றார் ராதாரவி.

English summary
Actor Radharavi has praised Seeman and slams Political parties in Chennai function
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X