மோடியின் அன்பு கட்டளை.. லேட்டானாலும் லேட்டஸ்டாக செய்த ரஜினி! ட்விட்டர்போய் பாருங்க! கொடி பறக்குதா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையை ஏற்று நடிகர் ரஜினிகாந்த் 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசியக் கொடியை ட்விட்டர் டிபியாக வைத்து இருக்கிறார்.

இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை மத்திய அரசு அமுத பெருவிழாவாக கொண்டாட தயாராகி வருகிறது. குறிப்பாக சுதந்திர தின விழாவுக்காக தேசியக்கொடி விதிமுறைகளில் மத்திய அரசு மாற்றங்களை செய்து இருக்கிறது.

கைத்தறி பருத்தி துணியால் மட்டுமே தேசிய கொடிகளை பயன்படுத்த வேண்டும் என்ற விதி இருந்த நிலையில், எந்திரத்தால் தயாரிக்கப்பட்ட பாலிஸ்டர், காட்டன், கம்பளி, பட்டு போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட தேசியக் கொடிகளை பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

மான் கி பாத்

மான் கி பாத்

இதற்காக கடந்த ஆகஸ்டு 2 ஆம் தேதியில் இருந்து சுதந்திர தினமான ஆகஸ்டு 15 ஆம் தேதி வரை சமூக வலைதள கணக்குகளின் புரொபைல் படங்களில் தேசிய கொடியை வைக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக கடந்த ஜூலை 31 ஆம் தேதி மான் கி பாத் வானொலி உரையில் நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "இந்த மான் கி பாத் உரை மிகவும் சிறப்புமிக்கது.

75 வது சுதந்திர தினம்

75 வது சுதந்திர தினம்

அதற்கு முக்கிய காரணம் இந்தியா சுதந்திரம் அடைந்து 75 வது ஆண்டை நிறைவு செய்து இருக்கிறது. நான் வரலாற்று சிறப்புமிக்க தருணத்தின் ஆதாரங்களாக விளங்குகிறோம். நாட்டுக்காக பல்வேறு தியாகங்களை செய்த புரட்சியாளர்களுக்கு எனது அஞ்சலியை நான் செலுத்துகிறேன். இந்திய சுதந்திரத்தின் அமுத பெருவிழா மக்கள் பேரியக்கமாக உருவெடுத்து இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

மோடி ட்விட்டர் கணக்கு

மோடி ட்விட்டர் கணக்கு

ஆகஸ்டு 13 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 15 ஆம் தேதி தேதி வரை வீடுதோறும் தேசியக்கொடி ஏற்ற சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த இயக்கத்தில் பங்கேற்று நீங்களும் உங்கள் இல்லங்களில் தேசியக்கொடியை ஏற்றி பறக்க விடுங்கள். இதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் என பலரும் தேசியக் கொடியை ட்விட்டர் கணக்கில் புரொபைல் படங்களாக வைத்துள்ளார்கள்.

ரஜினிகாந்த் ட்விட்டர்

ரஜினிகாந்த் ட்விட்டர்

கேரளா, இந்தி நடிகர்கள் பலர் பிரதமரின் கோரிக்கையை ஏற்று டிபியை மாற்றிய நிலையில் நடிகர் ரஜினிகாந்த் உட்பட தமிழ் சினிமாவில் யாரும் டிபியை மாற்றவில்லை என்று கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தேசியக்கொடி கம்பத்தில் பறப்பதைபோன்ற படத்தை தனது ட்விட்டர் பக்கத்தின் டிபியாக மாற்றி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+