'சங்கி' கெட்ட வார்த்தை கிடையாது.. சட்டென முகம் மாறிய ரஜினிகாந்த்! சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி
சென்னை: தனது தந்தையை சங்கி என்று குறிப்பிடுவது வேதனை அளிப்பதாக நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா சமீபத்தில் கவலை தெரிவித்திருந்தார். இந்நிலையில், 'சங்கி' என்பது கெட்ட வார்த்தை இல்லை என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்தான் 'லால் சலாம்'. இந்த பெயர் இடதுசாரிகளின் முழக்கமாகும். இதற்கு 'செவ்வணக்கம்' என்று பொருள். கம்யூனிஸ, சோசலிச புரட்சிகர தத்துவங்களை பின்பற்றி அதற்காகவே உயிர்நீத்தவர்களுக்கு செவ்வணக்கம் முழங்கப்படும். இந்த பெயரில் தயாராகியுள்ள திரைப்படத்தில், நடிகர் ரஜினி இஸ்லாமியர் தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

சமீப காலங்களாக ரஜினியின் நடவடிக்கைகள் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியது, அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் முதல் வரிசையில் அமர்ந்து பங்கேற்றது என அவர் இந்துத்துவ நிலைப்பாட்டிற்கு ஆதரவாக இருக்கிறார் என்று விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு அவ்வப்போது விளக்கமளித்து தன் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து வந்திருக்கிறார் ரஜினி.
இப்படி இருக்கையில் 'லால் சலாம்' எனும் திரைப்படத்தில் அவர் நடத்திருப்பது பெரும் கவனத்திற்கு உள்ளானது. இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா பேசியிருந்தது சலசலப்புகளை ஏற்படுததியிருந்தது. அதாவது,
"எங்கள் படக்குழுவினர், சோசியல் மீடியாவில் வரும் பதிவுகளை அவ்வப்போது காட்டினார்கள், அதில் என் காதில், அடிக்கடி ஒரு வார்த்தை விழுகுது. எங்க அப்பாவை சங்கின்னு சொல்றாங்க. ஒரு அரசியலை சார்ந்தவங்களை சங்கின்னு சொல்லுவாங்கன்னு சொன்னாங்க. சங்கி வார்த்தை முதலில் எனக்கு தெரியாது. அதை பற்றி தெரிந்து வேதனைப்பட்டேன். ஒரு இயக்குனராக இதை சொல்ல பெருமைப்படுகிறேன். ரஜினி ஒரு சங்கியாக இருந்தால் லால் சலாம் படத்தில் நடித்திருக்க மாட்டார். ஒரு சங்கியால் இந்த படம் பண்ண முடியாது. அந்த தைரியம் ரஜினியை தவிர யாருக்கும் இல்லை" என்று பேசியிருந்தார்.
இது குறித்து சோஷியல் மீடியாக்களில் பெரும் விவாதம் வெடித்தது. இந்நிலையில், வழக்கம்போல இந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரஜினி விளக்கமளித்திருக்கிறார். அதில், "சங்கி என்பது கெட்டவார்த்தை என்று பொருள்பட ஐஸ்வர்யா பேசவில்லை. ஆன்மீகவாதியான தனது தந்தையை சங்கி என குறிப்பிடக்கூடாது என ஐஸ்வர்யா பேசினார்" என்று தனது பாணியில் விளக்கமளித்துள்ளார்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications