“தலைவா..” சாமி தரிசனத்துக்கு முன் சூப்பர் ஸ்டார் தரிசனம்! ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தன்னுடைய வீட்டு வாசலில் காத்திருந்த ரசிகர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்.
இந்தக்களின் முக்கிய பண்டிகைகயான தீபாவளி இன்று கோலாகளமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் வாழும் இந்துக்கள் இந்த நாளில் பட்டாசுகளை வெடித்து கோலாகளமாக பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் இன்று தீபாவளி பண்டிகையை காலை முதலே வெகு விமரிசையாக மக்கள் கொண்டாடி வருகிறார்கள். குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாட பல்வேறு சிரமங்களை தாண்டி லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு வந்து இருக்கிறார்கள்.

இதனால் இரவு முழுவதும் ரயில்கள், அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலையே எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து, பூஜை செய்து, வீட்டில் சமைத்த அல்லது கடைகளில் வாங்கிய இனிப்பு பலகாரங்களை மக்கள் சுவைத்து, பட்டாசுகளை வெடித்து அனைவரும் தீபாவளி பண்டிகையை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்கின்றனர்.
இளைஞர்கள், சிறுவர்கள் அதிகாலை முதலே பட்டாசுகளை வெடித்து வருவதால் எங்கும்m வெடி சத்தம் நிறைந்து உள்ளது. நாடே கொண்டாட்ட மனநிலையில் மூழ்கி உள்ளது. புது மணத் தம்பதிகள் இன்று தீபாவளியை கொண்டாடி மகிழ்கின்றனர். மாற்று மதத்தினருக்கு வீட்டில் சமைத்த உணவு பலகாரங்கள் மற்றும் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை பரிமாறி வருகிறார்கள். இப்படி எல்லோரும் தீபாவளியை ஒரு விதமாக கொண்டாடும் வேளையில் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் மட்டும் தீபாவளியை தனி வழியில் கொண்டாடுவார்கள்.
#WATCH | Tamil Nadu: Actor Rajinikanth greets his fans at his residence in Chennai, on the occasion of #Diwali. pic.twitter.com/XqfIti19nr
— ANI (@ANI) November 12, 2023
புத்தாடை அணிந்து சாமி தரிசனம் செய்வதற்கு முன் எங்கள் தலைவர் தரிசனம் வேண்டும் என்று சொல்லி சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டு வாசலை நோக்கி சென்று விடுவார்கள். ரஜினிகாந்தும் வீட்டுக்கு வெளியில் வந்து ரசிகர்களிடம் கையசைத்து வாழ்த்துக்களை தெரிவிப்பார். அந்த வகையில் இன்றும் ஏராளமான ரசிகர்கள் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தின் வாசல் முன் அவரை சந்திப்பதற்காக திரண்டு இருந்தனர். சிறிது நேரத்தில் வீட்டை விட்டு வெளியில் வந்த ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு கையசைத்து தீபாவளி வாழ்த்தை தெரிவித்தார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications