எனது நண்பர் டெல்லி கணேஷ்.. அருமையான மனிதர் , அற்புதமான நடிகர்.. இரங்கல் தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்
சென்னை: பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ள சம்பவம் திரையுலகினர் அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், நடிகர் டெல்லி கணேஷ் மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் நடிப்பால் தனக்கென தனி முத்திரையை பதித்தவர் நடிகர் டெல்லி கணேஷ். வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் டெல்லி கணேஷ் (80) நேற்று இரவு காலமானார். கடந்த 3 நாட்களாக அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதையடுத்து, அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மூன்று நாட்களுக்கு முன் அவரின் உடல்நிலை மோசமானது.

இந்நிலையில், நேற்று இரவு 9 மணிக்கு உறங்கச் சென்ற நிலையில் 11.30 மணியளவில் உயிரிழந்துள்ளார். அவரது மறைவிற்கு தமிழ்நாடு முழுக்க திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குணச்சித்திர கதாப்பாத்திரங்கள், காமெடி, வில்லன் என அனைத்து கதாபாத்திரத்திலும் தனது அசாத்திய நடிப்பின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர்.
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு டெல்லி கணேஷின் சொந்த ஊராகும். இந்திய விமானப்படையில் டெல்லி கணேஷ் பணியாற்றி வந்த நிலையில், திரைத் துறையின் மேல் கொண்ட ஆர்வம் காரணமாக அப்பணியை உதறிவிட்டு திரைத் துறைக்கு வந்தவர். இயக்குநர் கே.பாலச்சந்தரால் டெல்லி கணேஷ் என்று அன்போடு அழைக்கப்பட்டவர் சுமார் 400க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
டெல்லி கணேஷின் மறைவுக்கு திரைப் பிரபலங்கள், அரசியல் கட்சியினர் என அனைத்து தரப்பினரும் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் டெல்லி கணேஷுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது; "என்னுடைய நண்பர் டெல்லி கணேஷ் அருமையானதொரு மனிதர். அற்புதமான நடிகர். அவருடைய மறைவு செய்தி கேட்டு நான் மனம் வருந்துகிறேன். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" தெரிவித்துள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications