அயோத்தி புறப்பட்ட ரஜினிகாந்த்! செல்லும்முன் கூறிய அந்த வார்த்தை! கூடவே போகும் அந்த 2 பேர் தெரியுமா
சென்னை: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் இருந்து புறப்பட்டுள்ளார். அவருடன் 2 முக்கிய நபர்களும் புறப்பட்டுள்ள நிலையில் பயணத்துக்கு முன்பு அயோத்தி ராமர் கோவில் பற்றி நடிகர் ரஜினிகாந்த் கூறிய வார்த்தை கவனம் பெற்றுள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. நாளை கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.

மேலும் நாடு முழுவதும் இருந்து பல்வேறு துறைகளில் சாதித்தவர்கள், மத்திய அமைச்சர்கள், மடாதிபதிகள், சாமியார்கள், கரசேவர்களின் குடும்பத்தினர், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் என சுமார் 3 ஆயிரம் விவிஐபிக்கள் உள்பட மொத்தம் 10 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். இவர்களுக்கு கோவில் நிர்வாகம் மற்றும் உத்தர பிரதேச மாநில அரசின் சார்பில் அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டன.
அதன்படி ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டவரும், பாஜக தலைவர்களுடன் நெருக்கமாக இருப்பவருமான நடிகர் ரஜினிகாந்துக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் தென்பாரத அமைப்பாளர் செந்தில்குமார், பாஜகவின் அர்ஜுன மூர்த்தி உள்ளிட்டவர்கள் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து இந்த அழைப்பிதழை வழங்கி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க வரும்படி கூறினர்.
இதனை நடிகர் ரஜினிகாந்த் ஏற்றுக்கொண்டார். மேலும் குடும்பத்துடன் கண்டிப்பாக வருவதாகவும் அவர் தெரிவித்து இருந்ததோடு, விழாவில் பங்கேற்பதை பாக்கியமாக கருதுவதாகவும் அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தான் நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் அதில் பங்கேற்க ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து புறப்பட்டுள்ளார்.
அவர் தனது மனைவி லதா ரஜினிகாந்த், அண்ணன் சத்யநாராயணா ஆகியோருடன் அயோத்தி புறப்பட்டுள்ளார். இவர்கள் 2 பேரும் ரஜினிகாந்த் புறப்படுவதற்கு முன்பே தனி கார்களில் சென்னை விமான நிலையத்துக்கு புறப்பட்டு சென்றனர். இவர்கள் 3 பேரும் சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் செல்கின்றனர். அதன்பிறகு டெல்லியில் இருந்து அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்கின்றனர்.
அயோத்தி ராமர் கோவிலுக்கு புறப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் பத்திரிகையாளர்களிடம், ‛‛500 ஆண்டு பிரச்சனைக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு மூலம் தீர்வு வழங்கப்பட்டுள்ளது. இது வரலாற்றில் மறக்க முடியாத நாள்'' என தெரிவித்துள்ளார். முன்னதாக அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது என அவர் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications