என் வாழ்நாளில் ஆர்எம் வீரப்பனை மறக்கவே முடியாது! நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்
சென்னை: ஆர் எம் வீரப்பன் எப்போதுமே பணத்திற்கு பின்னால் போனதே இல்லை. என் வாழ்நாளில் ஆர்எம் வீரப்பனை மறக்கவே முடியாது என்று நேரில் அஞ்சலி செலுத்திய பிறகு ரஜினிகாந்த் உருக்கமாக பேட்டியளித்தார்.
மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், கருணாநிதி உள்ளிட்டோரிடம் மிக நெருக்கமாக இருந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 98. முதுமை காரணமாக அரசியல் வாழ்க்கைக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, சென்னை தியாகராயநகரில் உள்ள தனது வீட்டில் ஓய்வு எடுத்து வந்த அவருக்கு திடீரென்று முச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதையடுத்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று பிற்பகல் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். ஆர் எம் வீரப்பன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள ஆர் எம் வீரப்பன் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் ஆர் எம் வீரப்பனுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்தும் ஆர் எம் வீரப்பன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரஜினிகாந்த் கூறியதாவது:- முழு வாழ்க்கையை வாழ்ந்து நம்மை விட்டு பிரிந்து இருக்கிறார் உத்தமர் ஆர்.எம். வீரப்பன். எம்ஜிஆரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி.. சினிமா வாழ்க்கையிலும் சரி.. அரசியல் வாழ்க்கையிலும் சரி..
அவருக்கு வலது கையாக இருந்தவர் ஆர்.எம் வீரப்பன். அவரால் உருவாக்கப்பட்ட பல சிஷ்யர்கள் மத்திய மாநில அமைச்சர்களாக ஆகி கல்வி அதிபர்களாக ஆகி பேரும் புகழும் பணத்தோடு இப்போதும் வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள். ஆர் எம் வீரப்பன் எப்போதுமே பணத்திற்கு பின்னால் போனதே இல்லை.
கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்பதை கடைபிடித்து வாழ்ந்தவர். எனக்கும் அவருக்குமான நட்பு மிக ஆழமானது.. உணர்ச்சிகரமானது.. புனிதமானது. என் வாழ்நாளில் அவரை நான் மறக்கவே முடியாது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் அவர் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். இவ்வாறு அவர் கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications