பிராவோ இந்தியா… ! டுவிட்டரில் ரஜினிகாந்த் நச் பாராட்டு… குவியும் வாழ்த்துகள்
சென்னை:பாகிஸ்தான் மீது இந்திய விமானப்படையின் அதிரடி தாக்குதலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பிராவோ இந்தியா என்று ரத்தின சுருக்கமாக நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.
புல்வாமாவில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்கள் மீது விமானப் படை அதிரடி தாக்குதல் நடத்தியிருக்கிறது. இன்று அதிகாலை 3.30 மணியளவில் நடத்தப்பட்ட தாக்குதலில், தீவிரவாத முகாம்கள் மீது சக்தி வாய்ந்த குண்டுகள் வீசப்பட்டன.
12 மிராஜ் 2,000 ரக போர் விமானங்கள் இத்தாக்குதலில் பயன்படுத்தப்பட்டு உள்ளன. சுமார் 1,000 கிலோ எடையுள்ள வெடிகுண்டுகளை வீசியதில் தீவிரவாதிகளின் முகாம்கள் முற்றிலும் அழிந்தன.

குவியும் வாழ்த்துகள்
இந்த அதிரடி தாக்குதலை நடத்திய இந்திய விமானபடைக்கு பலதரப்பில் இருந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், திரையுலகத்தினர் என எந்தவித பாகுபாடும் இன்றி ஒட்டு மொத்தமாக ஒரே குரலில் இந்திய விமானப்படைக்கும், மத்திய அரசுக்கும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
|
ரஜினிகாந்த் வாழ்த்து
நடிகர் ரஜினிகாந்த் வழக்கம் போல ரத்தின சுருக்கமாக தமது டுவிட்டரில் இந்திய விமானப்படைக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
பிராவோ இந்தியா என்று ஆங்கிலத்தில் வாழ்த்து என்று அதில் குறிப்பிட்டு உள்ளார். தொடர்ச்சியாக, இந்திய கொடியின் படத்தையும் பதிவிட்டு, கை தட்டல்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.
|
கிரண்பேடி டுவிட்டர்
இதேபோன்று புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி தமது டுவிட்டரில் வாழ்த்து கூறியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
தீவிரவாதத்துக்கு எதிரான தாக்குதல்களை இந்தியா செயல்படுத்த தொடங்கி இருக்கிறது. அமைதிக்கான, மரியாதையான வாழ்க்கைக்கான போராட்டம் என்று அவர் கூறியிருக்கிறார்.
|
நாராயணசாமி பாராட்டு
ஆளுநரை தொடர்ந்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
தீவிரவாத முகாம்களை அழித்த வீரர்களால் நாட்டுக்கு பெருமை. தீவிரவாத முகாம்களை அழித்த இந்திய விமானப் படைக்கு வணக்கங்களை தெரிவிக்கிறேன் என்று நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
|
அற்புதமான வீரர்கள்
விமானப்படை வீரர்கள் அற்புதமான வீரர்கள் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பாராட்டி இருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
இந்திய விமானப்படைக்கு குவியும் பாராட்டுகள்.. இந்திய விமானப்படை வீரர்களை நாட்டின் அற்புதமான வீரர்கள் என்றும் கூறலாம் என்று மமதா பானர்ஜி கூறியிருக்கிறார்.
|
அகிலேஷ் சல்யூட்
விமானப்படைக்கு சல்யூட் அடிப்பதாக உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
இந்திய விமானப்படைக்கு குவியும் பாராட்டுகள்.. இந்திய விமானப்படைக்கும் ஆயுதப்படைக்கும் என் வணக்கங்களும் பாராட்டுகளும் என்று அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
|
சேவாக், தவான் பாராட்டு
இந்திய விமானப்படை வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக அற்புதமாக விளையாடி இருக்கிறார்கள் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் பாராட்டி உள்ளார். அவர் தமது டுவிட்டரில் இதை கூறியிருக்கிறார்.
இதேபோன்று மற்றொரு கிரிக்கெட் வீரரான ஷிகர் தவானும் பாராட்டி இருக்கிறார். அவர் தமது டுவிட்டரில், குறித்த நேரத்தில், தையரியத்துடன் செயல்பட்ட இந்திய விமானப்படைக்கு பாராட்டுகள் என்று கூறியிருக்கிறார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications