நடிகர் ரஜினிகாந்த்திற்கு திடீர் நெஞ்சு, வயிற்று வலி.. இன்று முக்கிய சிகிச்சை! அப்பல்லோ சொல்வது என்ன?
சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளது என்று அம்மருத்துவமனை நிர்வாகம் அறிவித்து உள்ளது. இன்று ரஜினிகாந்திற்கு காலை 9 மணிக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
நேற்று இரவு திடீரென அவருக்குக் கடுமையான வயிற்று வலி மற்றும் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இன்று ரஜினிகாந்திற்கு நெஞ்சு வலிக்கான சிகிச்சைகள் அளிக்கப்பட உள்ளன. இன்று முக்கியப் பரிசோதனைகள் நடைபெறும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு cath லேபில் சிகிச்சை, சோதனைகள் செய்யப்பட உள்ளன.
பொதுவாக இதய வடிகுழாய் ஆய்வகம் (கேத் லேப்) பல்வேறு நடைமுறைகளை செய்ய பயன்படுத்தப்படும். கேத் லேப்பில் சோதனைகள், சிகிச்சைகள் இரண்டும் செய்யலாம். இதய அடைப்பு நீக்குதல், ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் இதய ஐசிடிகளை பொருத்துதல் உள்ளிட்ட பரிசோதனைகள் மற்றும் நடைமுறைகள் மேற்கொள்ளப்படும். ஒரு கேத் லேப் பொதுவாக இருதயநோய் நிபுணரால் வழிநடத்தப்படும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளது என்று அம்மருத்துவமனை நிர்வாகம் அறிவித்து உள்ளது.
சினிமா: நடிகர் ரஜினிகாந்த் சினிமா ஷூட்டிங்கில் மிகவும் பிசியாக இருக்கிறார். அவரது நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம் அடுத்த வாரம் ரிலீஸாகிறது. ஜெய்பீம் ஞானவேல் இயக்கியுள்ள இந்த படத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக ரஜினிகாந்த் நடித்துள்ளார். இது போக கூலி படத்திலும் அவர் நடித்து வருகிறார்.
மோசமான உடல்நிலை: இதற்கு இடையேதான் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளது. 73 வயதான ரஜினிகாந்த்திற்கு நேற்று இரவு திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டது. அவர் தனக்கு நெஞ்சு எரிச்சல் மற்றும் வயிற்று வலி இருப்பதாக கூறி உள்ளார்.
இந்த வலி காரணமாக அவதிப்பட்டு உள்ளார். இதையடுத்து அவர் உடனடியாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். முதல் கட்ட சோதனைக்கு பின் அவருக்கு கேத் லேபில் சில சோதனைகள், சிகிச்சைகள் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இப்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் கவலைப்படத் தேவையில்லை என்றே மருத்துவர்கள் கூறியதாகக் கூறப்படுகிறது.
என்னனென்ன செய்முறைகள் நடக்கும்: அவருக்கு cath லேபில் சிகிச்சை, சோதனைகள் செய்யப்பட உள்ளன. பொதுவாக கேத் லேபிள் பின்வரும் சிகிச்சைகள் , செய்முறைகள் செய்யப்படும்.
ஆஞ்சியோபிளாஸ்டி: இரத்த நாளங்களில், குறிப்பாக இதயத்தில் உள்ள அடைப்புகள் அல்லது சிக்கல்களுக்கு சிகிச்சையளிக்கும் ஒரு செயல்முறை.
வடிகுழாய் நீக்கம்: அசாதாரண இதய தாளங்களுக்கு சிகிச்சையளிக்கும் செயல்முறை.
ரோட்டோபிலேஷன்: கரோனரி தமனிகளில் பிளேக் குவிவதைத் தடுக்க ஒரு சிறப்பு வடிகுழாயைப் அமைக்கும் ஒரு செயல்முறை.
பொதுவாக இதய அடைப்பு, மாரடைப்பு ஏற்படுவதை தடுக்க இங்கே சிகிச்சைகள் செய்யப்படும். இன்று ரஜினிகாந்திற்கு காலை 9 மணிக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. . அங்கு அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் வைத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது . .
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications