Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழன்டா! இது தமிழர்களின் பாரம்பரிய அடையாளம்! செங்கோல் பற்றி நடிகர் ரஜினி பெருமை! மோடிக்கு நன்றி

Subscribe to Oneindia Tamil

சென்னை: டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டடத்தை நாளை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதில் மக்களவையில் சபாநாயகர் இருக்கை அருகே தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட செங்கோல் நிறுவப்பட உள்ள நிலையில் அதுபற்றி நடிகர் ரஜினிகாந்த் ‛தமிழன்டா' என பெருமையாக கூறியுள்ளதோடு, பிரதமர் மோடிக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் புதிதாக நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டத்துக்கான அடிக்கல்லை பிரதமர் மோடி கடந்த 2020 டிசம்பரில் நாட்டினார். அதன்பிறகு 2021ல் பணி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது. தற்போது சுமார் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் முக்கோண வடிவில் பிரமாண்டமாக இந்த நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

Actor Rajnikanth says thank you for PM Modi who will be install Sengol in Parliament

இந்த புதிய நாடாளுமன்றத்தின் திறப்பு விழா அதன் வளாகத்தில் நாளை நண்பகல் 12 மணிக்கு நடைபெற இருக்கிறது. புதிய நாடாளுமன்றத்தை, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்க இருக்கிறார். விழாவில் பங்கேற்க மக்களவை மற்றும் மாநிலங்களவையின் உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேச பொறுப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் புதிய நாடாளுமன்றத்தை குடியரசு தலைவர் திரெளபதி முர்மு தான் திறந்து வைக்க வேண்டும் எனக்கூறி காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்பட 19 எதிர்க்கட்சிகள் விழாவை புறக்கணித்துள்ளன. மேலும் தொடர்ந்து புதிய நாடாளுமன்ற கட்டடம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த புதிய நாடாளுமன்றம் நாட்டின் பன்முகத்தன்மையைப் போற்றும் நோக்கில் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் பொருட்கள் வாங்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதில் மிக முக்கிய அம்சம் என்னவென்றால் நாடு சுதந்திரம் அடைந்தபோது அதை அடையாளப்படுத்தும் விதமாக ஆங்கிலேயர்கள், அப்போதைய பிரதமர் நேருவிடம் வழங்கிய செங்கோல் மக்களவை சபாநாயகரின் இருக்கை அருகே நிறுவப்பட உள்ளது.

Actor Rajnikanth says thank you for PM Modi who will be install Sengol in Parliament

இந்த செங்கோல் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டதாகும். அதாவது ஆங்கிலேயர்களிடம் இருந்து ஆட்சியை எப்படி நாம் ஏற்பது என நேரு, ராஜாஜியை கலந்து ஆலோசித்தார். இந்த வேளையில் ராஜாஜி செங்கோல் பரிமாறி ஆட்சியை ஏற்கலாம் என்றார். இதையடுத்து தஞ்சாவூரில் உள்ள திருவாவடுதுறை ஆதீனம் மூலம் சென்னையைச் சேர்ந்த வும்மிடி பங்காரு செட்டி நகைக்கடையில் வும்மிடி எத்திராஜுலு மற்றும் வும்மிடி சுதாகர் ஆகியோர் செங்கோலை உருவாக்கினார். இந்த செங்கோலை மவுண்ட் பேட்டன் பிரபு, நேருவிடம் வழங்கினார். இந்த செங்கோல் உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத் பிரக்யாராஜ் மியூசியத்தில் இருந்த நிலையில் தான் நாடாளுமன்றத்தில் நிறுவப்பட உள்ளது.

இந்த செங்கோல் மியூசியத்தில் இருந்து எடுத்து டெல்லி கொண்டு செல்லப்பட்டது. இந்த செங்கோலை இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாசார்ய சுவாமிகள் வழங்கினார். பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் இருந்து 21 ஆதீனங்களும் பங்கேற்றுள்ளனர். நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் , மத்திய இணைமந்திரி எல்.முருகன் உடனிருந்தனர்.

இந்நிலையில் தான் நடிகர் ரஜினிகாந்த் செங்கோல் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பெருமையாக கூறியுள்ளதோடு, பிரதமர் மோடிக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். இதுபற்றி நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளதாவது: ‛‛இந்திய நாட்டின் புதிய பாராளுமன்ற கட்டடத்தில் ஜொலிக்கப் போகும் தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தின் பாரம்பரிய அடையாளம் - செங்கோல். தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த பாரதப்பிரதமர் நரேந்திர மோடிக்கு என் மனமார்ந்த நன்றி'' என கூறியுள்ளார். மேலும் இந்த ட்விட்டர் பதிவை நடிகர் ரஜினிகாந்த் ‛தமிழன்டா' என்ற ஹேஷ்டேக்கில் பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+