இது யாருன்னு தெரியுதா பாருங்க.. என்னன்னு புரியுதா.. தர்பார் அக்கப்போர்.. தாங்க முடியலடா சாமி..!!
தலைமை செயலகத்தில் ரஜினிகாந்த் நிற்கும் செட் ஒன்று வைரலாகி வருகிறது
Recommended Video
சென்னை: இது யாருன்னு கொஞ்சம் பாருங்க.. என்னன்னும் உற்று பாருங்க.. சாட்சாட் ரஜினிதான்.. தலைமை செயலகத்தில் நுழைவாயில் போஸ்டரில் கெத்தாக நின்று கொண்டிருக்கிறார்!
பொதுவாக ரஜினி படம் வந்தால் கட்அவுட் வைப்பார்கள்.. பேனர் வைப்பார்கள்.. அதுக்கு பால், தயிர், ஊற்றி ரசிகர்கள் அபிஷேகம் நடத்துவார்கள்.
ஆனால் இப்போது வேற லெவலுக்கு ரசிகர்கள் சென்றுவிட்டனர்.. டைரக்டர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து தர்பார் படம் வெளிவர போகிறது.. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளனர்.. பொங்கலுக்கு படம் வெளியாக உள்ளதால், பெரும் எதிர்ப்பார்ப்பை இந்த படம் ஏற்படுத்தி வருகிறது.

ஷூட்டிங்
இந்த படம் ஷூட்டிங் தொடங்கியதில் இருந்து ஆடியோ லான்ச் வரை பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் போய் கொண்டிருக்கிறது.. இன்னும் ரிலீஸே ஆகாத நிலையில் ரஜினி ரசிகர்களின் அக்கப்போருக்கு ஒரு அளவே இல்லாமலும் போய்விட்டது.

மணப்பாறை
மணப்பாறையில் ரஜினி மக்கள் மன்றத்தினர் தர்பார் பட ரிலீசுக்காக ஒரு செட் போட்டுள்ளனர்.. டி.ராஜேந்தர் படத்தில் வருவது போல பெரிய செட்டாக இருக்கிறது.. மேலே தமிழக அரசின் லோகாவுடன் தலைமை செயலகம் போல செட் போட்டுள்ளனர்.

நிர்வாகிகள்
"தமிழக அரசு, தலைமை செயலகம்.. 2021 தமிழக தர்பார்" என்று எழுதி வைத்துள்ளனர்.. நடுவில் ரஜினியின் தர்பார் பட ஸ்டில் உள்ளது.. இதற்கு கீழே மன்ற நிர்வாகிகள் பெயர்கள் போட்டோக்களுடன் இடம் பெற்றுள்ளன. கட்சி ஆரம்பிக்கிறேன் என்று கால் நூற்றாண்டுக்கும் மேலாக சொல்லி இன்னும் ஆரம்பிக்காத நிலையில், இப்படி ஒரு செட் எதற்கு என்று தெரியவில்லை.

வைரல் செட்
ஒருவேளை ரஜினி கட்சியே ஆரம்பிக்க மாட்டார், இப்படி தலைமை செயலக செட்டில் பார்த்தால்தான் உண்டு என்ற முடிவுக்கு ரசிகர்கள் வந்துவிட்டார்களா? அல்லது இந்த கோலத்தில் உங்களை பார்க்க ஆசை என்ற விருப்பத்தை செட் போட்டு புரிய வைக்க முயல்கிறார்களா என்று தெரியவில்லை.. ஆனால் தர்பார் படத்தைவிட இந்த செட் சமாச்சரம் படு வைரலாகி வருகிறது!
-
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
உன் நடிப்பு பிடிக்காதுன்னு பாரதிராஜா சொல்லுவாரு.. கடைசிவரை நான் நினைச்சது நடக்கல! ரஜினிகாந்த் உருக்கம் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள்












Click it and Unblock the Notifications