நடிகர் ராம்கி வீட்டின் மூல பத்திரம் திருட்டு.. பரபரப்பான பின்னணியில் போலீஸுக்கு ஓடிய நடிகர்
சென்னை: வீட்டில் தனது வீட்டு அசல் பத்திரத்தை காணவில்லை என நடிகர் ராம்கி போலீஸில் புகார் அளித்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் நடிகர் ராம்கி (எ) ராமகிருஷ்ணன் (61). இவர் இரட்டை ரோஜா, மருதுபாண்டி, இணைந்த கைகள் உள்ளிட்ட் படங்களில் நடித்திருந்தார்.

சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர் நேற்று தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலையில் ஜெமினி பார்சன் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறேன்.
கடந்த ஆகஸ்ட் மாதம் வீட்டில் அசல் ஆவணங்களை வைத்திருந்தேன். அண்மையில் அவற்றை தேடிய போது அவை கிடைக்கவில்லை. இதை கண்டுபிடித்து தாருங்கள் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து தேனாம்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் ஏற்கெனவே நடிகர் ராம்கி கார்ப்பரேஷன் வங்கியில் இந்த வீட்டின் பத்திரத்தை அடமானம் வைத்து ரூ 50 லட்சம் கடன் பெற்றதும், பின்னர் கடனுக்கு உண்டான தொகையைச் செலுத்தாததால் வீட்டை ஏலம்விட போவதாக வங்கி தரப்பில் நோட்டீஸ் ஒட்டியது.
அத்துடன் சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி கட்டவில்லை என மாநகராட்சி சார்பிலும் ராம்கி வீட்டில் நோட்டீஸ் ஒட்டியது குறிப்பிடத்தக்கது. ராம்கி 1987 ஆம் ஆண்டு சின்ன பூவே மெல்ல பேசு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து இவர் நிறைய படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் படங்களை தாண்டி தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ளார். மற்ற மொழிகளில் இவர் நடிக்கவில்லை. இவர் செந்தூர பூவே உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்துள்ளார். 2004 ஆம் ஆண்டு வரை கதாநாயகனாக நடித்துள்ளார். அதன் பிறகு இடைவெளி எடுத்துக் கொண்டார். பின்னர் 2013 இல் துணை நடிகராக நடித்து வருகிறார். மாசானி என்ற படத்தில் நடித்திருந்தார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுக்காவில் உள்ள சங்கரநத்தம்தான் இவருடைய சொந்த ஊர். அங்கு இருந்த அவரது பூர்வீக வீடு சுவர் இடிந்து விழுந்து மோசமான நிலையில் உள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி கடந்த ஆண்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் 1995 ஆம் ஆண்டு நடிகை நிரோஷாவை திருமணம் செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
மனைவி ஊருக்கு போன நேரத்தில்..வீட்டுக்கு வந்த கள்ளகாதலி! ப்ரிட்ஜில் நினைத்துப் பார்க்க முடியாத காட்சி -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications