ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ்! அரைகுறை ஆடையில் பெண்கள்.. ஆயுள் தண்டனை கொடுக்கணும்!.. நடிகர் ரஞ்சித் கோபம்
சென்னை: ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் எனும் நிகழ்ச்சியில் பெண்கள் அரைகுறை ஆடை அணிந்து சாலையில் நடனம் ஆடுவதுதான் ஏற்புடையது அல்ல என நடிகர் ரஞ்சித் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை நேரத்தில் ஹேப்பி ஸ்ட்ரீட் எனும் நிகழ்ச்சி அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் திரளாக கலந்து கொள்கிறார்.

வாரத்தில் 6 நாட்கள் அல்லது 5 நாட்களுக்கு வேலை காரணமாக கடுமையான மன அழுத்தத்தில் இருக்கும் மக்களுக்கு ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக வாரந்தோறும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் ஆட்டம், பாட்டம், கலை நிகழ்ச்சிகள் என நடந்து வருகின்றன.
இந்த நிலையில் இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி குறித்து நடிகர் ரஞ்சித் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். அவர் பேசுகையில் அண்மைக்காலமாக ஒரு கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு தெருவிலும் ஒவ்வொரு சந்துகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஹேப்பி ஸ்ட்ரீட் என்ற பெயரில் நடத்தப்படுகிறது.
உங்கள் அம்மா, அப்பா யார்? பெண் குழந்தைகளை அரைகுறை ஆடைகளுடன் தெருவில் ஆடவிடுவதை பார்க்கும் போது மன வேதனையாக இருக்கிறது. என்னிடம் அதிகாரம் இருந்தால் அனைவருக்கும் ஆயுள் தண்டனை கொடுத்து விடுவேன். யார் மகனோ யாருடனோ ஆடுவது, யார் பெண்ணோ யாருடனும் ஆடலாம். அதுதான் ஹேப்பி ஸ்ட்ரீட்.
மன அழுத்தத்தை போக்க தெருவில் கூத்தடிப்பதுதான் இது. இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி எதிர்காலத்தில் அடுத்த கட்டத்திற்கு போகும். ஒரு தாய்லாந்து போலவோ ஒரு சிங்கப்பூரை போலவோ மாறிவிடும். அப்படி வரக் கூடாது. வரவும் விடமாட்டோம். ஆரம்ப காலத்தில் செல்போன்கள் தகவல் பரிமாற்றத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது.
ஆனால் இன்று அது பேரழிவுக்கான ஒரு பாதையாக அமைந்துள்ளது. அதே போலத்தான் இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிகளும் ஆரம்பத்தில் சிறியதாக தோன்றி பிறகு மோசமாக மாறும். கோவையிலும் இந்த நிகழ்ச்சியை கொண்டாடும் நாம் வல்லிக்கும்மி போன்ற பாரம்பரிய நிகழ்ச்சிகளை ஊக்குவிக்க வேண்டும். இதுவே நமது கலாச்சாரம் என தெரிவித்துள்ளார். இவருக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் வருகின்றன.
இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் முதல் முறையாக சென்னை ஐஐடி வளாகத்தில் இன்று நடத்தப்பட்டது. காலை 6 மணி முதல் இசை, நடனம் என களை கட்டி வரும் இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்று நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் இந்த நிகழ்ச்சியை கொண்டாடி வருகிறார்கள்.
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications