ஆணவ கொலை வன்முறை அல்ல, அக்கறைதான்..வாயை விட்ட ரஞ்சித்! பைத்தியம்.. வரிந்து கட்டி வரும் நெட்டிசன்கள்!
சென்னை: நடிகரும் கவுண்டம்பாளையம் படத்தின் இயக்குனருமன ரஞ்சித் பேசிய பேச்சு தான் சமூக வலைதளங்களில் சூடான விவாதத்தை கிளப்பி இருக்கிறது. ஆணவக் கொலை தவறு இல்லை என்ற ரீதியில், பெற்ற பிள்ளையே வாழ்க்கை என இருப்பவர்கள் பிள்ளைகளின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்ற அக்கறையினால் வரும் கோவம் தான் அது, அது வன்முறை அல்ல என பேசியுள்ள நிலையில், அவருக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது..
90ஸ் காலகட்டத்தில் வில்லன் ஹீரோ குணச்சித்திர பாத்திரம் என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ரஞ்சித். தொடர்ந்து அவருக்கு சினிமாவில் வாய்ப்பு குறைந்த நிலையில் சில சீரியல்களிலும் தலைகாட்டி வந்தார்.

இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவர் மீண்டும் சினிமா உலகத்தில் கால் எடுத்து வைத்திருக்கிறார். வேறு இயக்குனர்கள் ரஞ்சித்துக்கு வாய்ப்பு தராத நிலையில் அவரே படத்தை தயாரித்து இயக்கி நடித்து இருக்கிறார்.
கவுண்டம்பாளையம் என பெயரிடப்பட்டுள்ள அந்த படம் தற்போது வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக அவர் பேசிய சர்ச்சை பேச்சு தான் தற்போது இணையதளத்தை சூடாக்கி இருக்கிறது. தற்போது மட்டுமல்ல ஏற்கனவே ரஞ்சித் இதுபோல பல கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். குறிப்பாக சென்னை, கோவை, சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் ஹாப்பி ஸ்ட்ரீட் எனும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாட்டம் சுயமரியாதை திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில் அவரது கவுண்டம்பாளையம் படத்தின் டிரைலரானது கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. குறிப்பிட்ட ஒரு கட்சியின் தலைவரையும், சில சாதி தலைவர்களை இழிவுபடுத்தும் வகையிலும் அந்த படத்தின் காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாக கடும் எதிர்ப்பு எழுந்தது. மேலும் மாட்டுக்கறி தொடர்பாக இடம்பெற்ற வசனம் தங்கள் வீட்டு பெண்களை கேவலப்படுத்துவது போல இருக்கிறது என கடுமையான குற்றச்சாட்டு எழுந்தது.
தொடர்ந்து எதிர்ப்பு எழுந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பே வெளியாக இருந்த இந்த படம் தள்ளிப்போனது. இதை அடுத்து தனக்கு எதிராக சதி நடப்பதாகவும், நாடக காதலுக்கு எதிராகத்தான் படம் எடுத்து இருக்கிறேன்.. காதலுக்கு எதிராக இல்லை என விளக்கம் அளித்து இருந்தார் ரஞ்சித். மேலும் சில சமூக விரோதிகள் ஆபிஸ் அமைத்தே நாடக காதல் செய்து அதன் மூலம் பணம் பெறுவதற்கென்றே செயல்பட்டு வருகிறார்கள் எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் அவரது கவுண்டம்பாளையம் படம் இன்று வெளியாகி இருக்கிறது. இதற்காக சேலம் வந்திருந்த அவர், தனது ரசிகர்களுடன் படத்தை பார்த்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், என்னை எதிர்ப்பவர்கள் என் படத்தை பார்க்க வேண்டாம்.. கவுண்டம்பாளையம் படத்தில் தேவையற்ற காட்சிகள் இருப்பதாக கூறி என்னை எதிர்ப்பவர்கள் படம் பார்த்து விட்டு பேச வேண்டும். படத்தை பார்க்காமலே பேசக்கூடாது. என்னை நேரடியாக எதிர்க்க முடியவில்லை என்பதால் முதுகில் குத்துவது போல் சிலர் செயல்படுகிறார்கள்" என்றார்.
அப்போது செய்தியாளர் ஒருவர் ஆணவ ஆதரவாக படத்தில் காட்சிகள் இருப்பதாக கேள்வி எழுப்பினார். அப்போது பேசிய நடிகர் ரஞ்சித்,"பெற்றவர்களுக்கு தான் வலி தெரியும், பைக்கை திருடி சென்றாலே உடனே போய் அடிப்பதில்லையா? பெற்ற பிள்ளையே வாழ்க்கை என இருப்பவர்கள் பிள்ளைகளின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்ற அக்கறையினால் வரும் கோவம் தான் அது, அது வன்முறை அல்ல" என கூறி அதிர வைத்தார்.
தமிழகத்தில் பல சாதி ஆணவ கொலை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அதற்கு ஆதரவாக ரஞ்சித் பேசி இருப்பது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் இதற்காக தனி சட்டம் வேண்டும் என்றெல்லாம் கோரிக்கை இருந்து நிலையில் ரஞ்சித்தின் இந்த பேச்சு பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ரஞ்சித்தின் பேச்சுக்கு பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ரஞ்சித்துக்கு பைத்தியம் முற்றிவிட்டது.. அவரை மனநல மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என நெட்டிசன்களும், ரஞ்சித் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரான வன்னியரசு உள்ளிட்டோர் தங்கள் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
பெரம்பூரில் திலகபாமா, தருமபுரியில் சவுமியா, விருத்தாசலத்தில் தமிழரசி! பாமக வேட்பாளர்கள் அறிவிப்பு -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
பல்ப் கொடுத்த பாஜக.. கோபத்தில் குஷ்பூ! நயினாருக்கு தெரியாமல் ஆடிய கேம்! சீனுக்குள் வந்த சுந்தர்.சி! -
திருமாவளவன் சட்டசபை தேர்தலில் போட்டி ஏன்? ஸ்டாலின் - விஜய் தான் காரணமா? பின்னணியில் 3 முக்கிய மேட்டர் -
வேட்பாளரானார் திருமாவளவன்.. விசிக சார்பில் சட்டசபை தேர்தலில் களமிறங்கும் 8 வேட்பாளர்கள் அறிவிப்பு -
அதிமுகவுக்கு ஆதரவு.. பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்க்கு நீலம் பண்பாட்டு மையம் சப்போர்ட்! பா.ரஞ்சித் அறிவிப்பு -
அரசு அலுவலர், ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு! ஸ்டாலின் சொன்ன மேஜர் அறிவிப்பு! திமுக சிக்ஸர் வாக்குறுதி -
"ரூ.30 லட்சம் வரை கடனுதவி".. சிறுபான்மையினரை கவர திமுக தேர்தல் அறிக்கையில் டாப் 10 அறிவிப்பு -
முட்டி மோதியும் கண்டுகொள்ளாத திமுக, அதிமுக.. 4 தொகுதிகளில் மன்சூர் அலிகான் தனித்துப் போட்டி! -
நன்னிலம் தொகுதி வேட்பாளர் முகமது முபாரக்.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் எஸ்டிபிஐ! -
DMK Manifesto: முதியோர் உதவித்தொகை இனி ரூ. 2 ஆயிரமாக உயர்வு.. ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு












Click it and Unblock the Notifications