இதுக்கு எதுக்கு பர்னிச்சரை உடைத்துக் கொண்டு.. பேசாமல் அதிமுகவில் போய் சேர்ந்திருக்கலாமே ரஞ்சித்!
நடிகர் ரஞ்சித் ஏன் டிடிவி தினகரன் கட்சியில் இணைந்தார்?
சென்னை: ஜெயலலிதா ஆட்சியில் ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்ட நபர் மற்றும் கட்சியுடன் ரஞ்சித் இணைந்திருப்பது பெருத்த ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் தந்துள்ளது.
நேத்து ரஞ்சித் அளித்த பேட்டி உண்மையிலேயே காரசாரமாக இருந்தது. அமைச்சர்கள் மீது ஊழல் புகாரை கூறிவிட்டு அவர்களுடனே கூட்டணி வைத்திருக்கும் பாமக மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியால் கட்சியிலிருந்து விலகுகிறேன் என்று காரணம் சொன்னார்.
ஆனால் கூட்டணி முடிவான நாள் அன்றே கட்சியிலிருந்து விலகாமல் இப்போது ஒருவாரம் கழித்து ஏன் இந்த முடிவை எடுக்க வேண்டும். டிடிவி தினகரனுடனான பேச்சுவார்த்தையில் இவ்வளவு நாள் ஈடுபட்டிருந்தாரா? என தெரியவில்லை.

என்ன காரணம்?
"உள்ளாட்சித் தேர்தல் வரை அதிமுகவுடன் பாமக இணைந்திருக்கும்.. பின்னர் விலகிவிடுவர்.. இன்னும் எத்தனை ஆண்டுகள் தான் மக்களை பாமக ஏமாற்றும்" என்று நேற்று ரஞ்சித் காரணம் சொல்லி இருந்தார். பாமகவில் ரஞ்சித் சேர்ந்து இன்னும் ஒரு தேர்தலைகூட சந்திக்கவில்லை.

ஏன் சேர்ந்தார்?
அப்படி இருக்கும்போது, அதற்குள் எப்படி பாமக விரைவில் விலகிவிடும் என்று சொல்கிறார்? தேர்தல் வந்தால் பாமக இப்படித்தான் இருக்கும் என்று தமிழக மக்களுக்கே தெரிந்திருக்கும்போது, ரஞ்சித்துக்கு தெரியாதா என்ன? தெரிந்திருந்தும் ஏன் பாமகவில் அன்று சேர வேண்டும் என்பதும் தெரியவில்லை.

ஊழல்வாதிகள்
அதேபோல, "அதிமுக அமைச்சர்களை ஊழல்வாதிகள் என்று விமர்சித்து விட்டு பாமக கூட்டணி வைத்தது ஏன்?" என்று ரஞ்சித் நேற்று கேட்ட கேள்வியையே நமக்கு திரும்ப கேட்க தோன்றுகிறது. இதே ஊழல் குற்றச்சாட்டுகள்தானே தினகரன் மீதும் உள்ளது. அவர் மீது ஊழல் கறை இல்லை என்று ரஞ்சித்தால் உறுதியாக சொல்ல முடியுமா?

நியாயமா?
மேலும் அதிமுகவில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வந்தவர்தானே தினகரன்? ஒருவேளை கருத்து வேறுபாடு இல்லையென்றால் அதே அதிமுகவில்தானே தினகரனும் இந்நேரம் இருந்திருப்பார்? ஊழல் கட்சியிலிருந்து பிரிந்து வந்த தினகரனுடன் ரஞ்சித் இப்போது இணைந்திருப்பது நியாயமா என்று தெரியவில்லை.

எங்கே இருக்கிறார்?
கடைசியாக ஒன்றே ஒன்று! இன்றைய தினம் அவர் சேர்ந்துள்ள அக்கட்சியின் பொதுச்செயலாளர் இந்நேரம் எங்கே, ஏன், எதற்காக, எப்படி, எந்த நிலைமையில் இருக்கிறார் என்ற கேள்விக்கு மட்டும் ரஞ்சித் பதில் சொல்லட்டும்.. பார்க்கலாம்!!
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications