அதிமுகவில் ஐக்கியமான வில்லன் + காமெடி நடிகர் ரவி மரியா... !

முதல்வர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் ரவிமரியா

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல தமிழ் நடிகர் ரவிமரியா அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கட்சியில் இணைந்தார்.

தேர்தல் நெருங்க நெருங்க நட்சத்திர பட்டாளங்களும் அரசியல் பக்கம் நெருங்க ஆரம்பித்துவிடுவார்கள். கிட்டத்தட்ட எல்லா கட்சிகளிலும் கூட்டணி, தொகுதி பங்கீடு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இனி அடுத்ததாக பிரச்சாரம்தான்!

Actor Ravi Mariya join in ADMK

இதற்கான ஆயத்த வேலைகளில் சில நடிகர், நடிகைகள் தயாராகி வருகிறார்கள். இதற்காக தங்களையும் கட்சியில் இணைத்து கொண்டு செயல்படவும் முடிவெடுத்துள்ளனர். அதன்படி, தமிழ் திரைப்பட வில்லன் நடிகரும் இயக்குனருமான ரவிமரியா அதிமுகவில் இணைந்துள்ளார்.

இவர் நடிகர் ஜீவா அறிமுகமான ஆசை ஆசையாய் என்ற படத்தை இயக்கியவர். தொடர்ந்து 'மிளகா' உள்ளிட்ட சில வெற்றி படங்களை கொடுத்தார். மேலும் இயக்குனர் வசந்தபாலன் இயக்கிய 'வெயில்' படத்தில் வில்லனாக அறிமுகமாகி, காமெடியனாக உருமாறி, 'லிங்கா', 'ஜில்லா' உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் கலக்கி உள்ளார்.

இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை சந்தித்த ரவிமரியா, அவர்களுக்கு சால்வை அணிவித்து அதிமுவில் தன்னை இணைத்து கொண்டார். அவருக்கு உறுப்பினர் அடையாள அட்டையை எடப்பாடி பழனிசாமி வழங்கி வாழ்த்தினார்.

இது பற்றி ரவிமரியா சொல்லும்போது, "முதல்வரும், துணை முதல்வரும் மக்கள் நலனில் அக்கறை காட்டுகிறார்கள். அவர்களே மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதால் அதிமுகவில் சேர்ந்தேன். எம்பி மற்றும் சட்டசபை தேர்தல்களில் பிரச்சாரம் செய்வேன்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+