சாதிவெறியரா சந்தானம்? அட்வைசும் சர்ச்சையும்! பாமகவை கைநீட்டும் ஜெய்பீம் அதரவு குழு!
சென்னை: சினிமாவில் ஒருவரை உயர்த்துவதற்காக இன்னொருவரை தாழ்த்தி பேச வேண்டாம் என நடிகர் சந்தானம் பேசிய கருத்து அவருக்கு சாதிவெறியர் என்ற பட்டத்தை தேடிக்கொடுத்திருக்கிறது.
Recommended Video
சாதிவெறியர் சந்தானம் என்ற ஹேஷ்டேக் மூலம் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இது வைரலாகி வருகிறது.
இதனிடையே சந்தானம் பேசியது யதார்த்தமான நிகழ்வு கிடையாது என்றும் அவரது கருத்தின் பின்னணியில் பாமக இருப்பதாகவும் ஜெய்பீம் திரைப்பட ஆதரவு குழு நம்புகிறது.

ஜெய்பீம் திரைப்படம்
கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற உண்மை நிகழ்வை தழுவி எடுக்கப்பட்ட ஜெய்பீம் திரைப்படத்திற்கு எதிர்ப்புகள் குறைந்தபாடில்லை. மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் குருவின் பெயரை படத்தில் வரும் வில்லனுக்கு சூட்டப்பட்டதற்கும் அக்னிக்கலசம் படம் பொருந்திய காலண்டரை படத்தின் காட்சியில் கொண்டு வந்ததற்கும் பாமக உட்பட வன்னியர் சமுதாய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

சந்தானம் அட்வைஸ்
இந்நிலையில் நடிகர் சந்தானம் ஜெய்பீம் திரைப்படத்தை இன்னும் தான் பார்க்கவில்லை என்றும் சினிமாவில் ஒருவரை உயர்த்துவதற்காக இன்னொருவரை தாழ்த்தக் கூடாது எனவும் அட்வைஸ் செய்திருக்கிறார். இனி வரக்கூடிய இளைஞர்கள் சமூகத்துக்கு ஒரு நல்ல சினிமாவை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட சந்தானம், படத்தில் ஜாதி மத பேதங்கள் இருக்கக்கூடாது எனத் தெரிவித்திருக்கிறார்.

பின்னணியில் யார்?
இவரது இந்த பேச்சின் பின்னணியில் பாமக இருப்பதாக நம்புகிறது ஜெய்பீம் திரைப்பட ஆதரவு குழு. ஏனெனில் ஏற்கனவே பாமகவில் நடிகர் சந்தானம் இணையவுள்ளதாக வெளியான தகவலும், ஒரே சமுதாயமும் இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. நடிகர் சூர்யாவுக்கு சூசகமாக சந்தானம் அட்வைஸ் செய்துள்ள நிலையில், சாதிவெறியர் சந்தானம் என்ற ஹேஷ்டேக்குடன் அவர் குறித்த விமர்சனங்கள் வைரலாகி வருகிறது.

சாதிவெறியர் ஹேஷ்டேக்
பிறரை இகழக்கூடாது என அட்வைஸ் செய்வதற்கு முன் நாம் அப்படி நடந்துகொண்டோமா என்பதை சந்தானம் சிந்தித்து பார்க்க வேண்டும் என சூர்யா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிலடி கொடுத்து வருகின்றனர். மாற்றுத்திறனாளிகளை சைட் ஸ்டாண்ட் என்றும் வட இந்தியர்களை பீடா வாயன்கள் எனவும், உடல் பருமனானவர்களை குங்ஃபூபாண்டா கரடி எனவும் சந்தானம் உதிர்த்த வார்த்தைகளை சுட்டிக்காட்டி விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

வரவேற்பு
ஜெய்பீம் திரைப்படம் விவகாரம் குறித்து நடிகர் சந்தானம் தெரிவித்துள்ள கருத்திற்கு வன்னியர் சமுதாய அமைப்புகளும், பாமகவும் வெளிப்படையாக பாராட்டு தெரிவிக்காவிட்டாலும் கூட இதை வரவேற்பதாக தெரிவிக்கப்படுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications