அடுக்குமாடி குடியிருப்பு ஆக்கிரமிப்பு! நடிகர் தனுஷ் தாய் புகார்! சரத்குமாருக்கு ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: அடுக்குமாடி குடியிருப்பில், பொதுவான பகுதிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதாக நடிகர் தனுஷின் தாய் தாக்கல் செய்த வழக்கில் சென்னை மாநகராட்சி, நடிகர் சரத்குமார் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை தி நகர் ராஜமன்னார் தெருவில் உள்ள கோல்டன் அப்பார்ட்மெண்டில் வசித்து வரும் நடிகர் தனுஷின் தாய் விஜயலட்சுமி மற்றும் திருநாவுக்கரசு, நுஷ்ரத் அபிதா உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்கில், உரிய அனுமதியுடன் கட்டப்பட்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பில் திறந்தவெளி மேல்தளத்தை மற்றவர்கள் பயன்படுத்துவதை குடியிருப்புவாசிகள் தடுப்பதாகவும், தரைத்தளத்தில் உள்ள நடிகர் சரத்குமார் சட்டவிரோதமாக பொது பகுதியை ஆக்கிரமித்து, வணிக ரீதியாக பயன்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், மற்றும் செந்தில்குமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் காஜா மொய்தீன் கிஸ்தி, நடிகர் சரத்குமார் உள்ளிட்டோர் குடியிருப்பின் பொதுவான பகுதிகளை மற்ற குடியிருப்புவாசிகள் பயன்படுத்துவதை தடுப்பதாகவும், இது குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து சென்னை மாநகராட்சி, நடிகர் சரத்குமார் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications