மின்சார கட்டணம் குறித்து மக்களுக்கு அரசு தெளிவுப்படுத்த வேண்டும்.. சரத்குமார் கோரிக்கை
சென்னை: மின்சார கட்டணம் தொடர்பாக மக்களுக்கு அரசு தெளிவுப்படுத்த வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்
எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போது உலகையே ஆட்டிப் படைத்து வரும் கொரோனா நோயிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக இந்த 2020-ஆம் ஆண்டை நாம் கடுமையாக போராடி கடக்க வேண்டும்.
தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. அவர்களுக்கு நாம் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். ஆனால் எதிர்க்கட்சிகள் குறை கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். மேலும் கொரோனாவிற்க்கு சிகிச்சை சிறப்பாக அளிக்கப்பட்டு வருகிறது.
ஆங்கில மருத்துவத்திற்கு நாம் எவ்வளவு முன்னுரிமை கொடுக்கிறோமோ அதே போல் சித்த மருத்துவத்திற்கும் நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும். ஏனென்றால் அந்த வைத்தியங்கள் அனைத்தும் நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஒரு வைத்தியமாகும்.
ஊரடங்கு காலகட்டத்தில் அனைவரும் வீட்டில் இருப்பது என்பது சாதாரண காரியங்கள் இல்லை. ஆனால் நாம் அனைவரும் வீட்டில் விழிப்புடன் இருப்பதே நம்மை பாதுகாத்துக் கொள்ள உதவும். அதேபோல் பல்வேறு பிரச்சினைகள் அதாவது மன உளைச்சல்கள் பொருளாதாரச் சிக்கல்கள் என பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன.
அமெரிக்காவும் சீனாவும் டேஞ்சரான பகுதியில் நுழைகிறார்கள்! நிபுணர்கள் எச்சரிக்கை!
இதிலிருந்து நாம் மீள வேண்டும் என நான் கடவுளை பிரார்த்திக்கிறேன். மேலும் கொரோனாவிற்கு மருந்துகளை கண்டுபிடிக்கும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அது கூடிய விரைவில் வெற்றி அடைய செய்து விரைவில் நம் குழுவில் இருந்து மீள வேண்டும்.
கருப்பர் கூட்டம் தொடர்பாக நான் சுற்றறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தேன். தற்போதும் நான் கூறுகிறேன். அது என்னவென்றால் இதுபோன்ற சம்பவங்களை வெளியிடும் சமூக வலைதளங்களை உடனடியாக நிறுத்த வேண்டும். மேலும் யாராக இருந்தாலும் மற்ற மதத்தினரையோ அவர்களை சார்ந்தவர்களையோ துன்புறுத்தக் கூடாது அப்படி மீறும்பட்சத்தில் அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.
கொரோனா தடுப்புப் பணியில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அதே போல் பல்வேறு தன்னார்வலர்களும் அரசியல் கட்சிகளும் அவர்களுக்கு ஒத்துழைப்பு அளித்து வந்தார்கள் அவர்களோடு சேர்ந்து சமத்துவ மக்கள் கட்சியும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. மேலும் மின்சார கட்டணம் தொடர்பாக மக்களுக்கு அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications