கவர்ச்சி ஆடை.. வாயை கொடுத்து வாங்கி கட்டிய நடிகர் சதீஷ்.. அப்படியும் ஏற்க ரெடியில்லை.. புது விளக்கம்
சென்னை: நடிகை தர்ஷா குப்தாவின் ஆடை குறித்து நானாக எதையும் பேசவில்லை, அவர் சொன்னதைதான் பேசினேன் என நடிகர் சதீஷ் விளக்கம் அளித்துள்ளார். நடிகையின் ஆடை குறித்து பொது வெளியில் சதீஷ் பேசியது சர்ச்சையாகியிருந்த நிலையில் சதீஷ் தெளிவுப்படுத்தியுள்ளார்.
ஓ மை கோஸ்ட் எனும் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் அண்மையில் நடந்தது. இந்த படத்தில் சன்னிலியோன், தர்ஷா குப்தா, நடிகர் சதீஷ், ஜிபி முத்து உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த விழாவில் நடிகர் சதீஷ் பேசுகையில் மும்பையிலிருந்து சன்னி லியோன் தமிழகத்திற்கு நமக்காக வந்திருக்கிறார்கள். அவர் எப்படி உடை அணிந்திருக்கிறார் பாருங்கள் (சன்னி லியோன் சேலை அணிந்திருந்தார்).
கோயமுத்தூரிலிருந்து ஒரு பொண்ணு வந்திருக்கு.. தர்ஷா குப்தா, அவரை பாருங்க. சன்னி எப்படி நமது கலாச்சாரத்திற்கு ஏற்றார் போல் வந்திருக்கிறார் என சதீஷ் பேசியிருந்தார். அதாவது தர்ஷா குப்தா கவர்ச்சிகரமாக ஆடை அணிந்து வந்ததாகவும், அது கலாச்சாரம் இல்லை எனவும் சதீஷ் கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

பாடகி சின்மயி
இதுகுறித்து பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அதில் அவர் கூறுகையில் அத்தனை கூட்டத்திற்கு மத்தியில் ஒரு பெண்ணின் கவர்ச்சி உடை குறித்து ஒரு ஆண் விவரிக்கிறார். ஆண்கள் எப்போதுதான் திருந்துவார்களோ. இதெல்லாம் காமெடி கிடையாது என அந்த வீடியோவையும் சேர்த்து சின்மயி வெளியிட்டிருந்தார்.

சதீஷ் விளக்கம்
இது பெரும் சர்ச்சையான நிலையில் நடிகர் சதீஷ் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில் தர்ஷா குப்தா என்னிடம், "பாருங்க நான் சன்னி லியோனை விட கவர்ச்சியாக உடை அணிந்து வந்துள்ளேன். அவர் எப்படி வருகிறார் என்பதை பார்ப்போம்" என்றார். ஆனால் சன்னி லியோன் பட்டுப்புடவையில் வந்ததை கண்டு தர்ஷா குப்தா அப்செட் ஆகிவிட்டார்.

கவர்ச்சி உடையில் தர்ஷா குப்தா
என்னிடம் மீண்டும் வந்த தர்ஷா "என்ன இவங்க சேலையில் வந்திருக்காங்க, நான் இப்படி கவர்ச்சி உடையில் வந்திருக்கேன். நான் அப்செட் ஆன விஷயத்தை கொஞ்சம் மேடையில் சொல்லுங்க" என கேட்டுக் கொண்டார். எனவே அவர் சொன்னதைதான் நான் மேடையில் சொன்னேன். மற்றபடி நானாக எதையும் கூறவில்லை. ஆனால் இதற்கு பாடகர் ஸ்ரீனிவாஸ், இயக்குநர் நவீன், பாடகி சின்மயி, டாக்டர் ஷர்மிளா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

தனிப்பட்ட உரிமை
பெண்கள் என்ன ஆடை அணிய வேண்டும் என்பது அவரவர் உரிமை என்றார்கள். அவர்கள் சொல்வது போல் ஆண்களும் சரி பெண்களும் சரி எந்த ஆடையை அணிவது என்பது அவரவர் தனிப்பட்ட உரிமை என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அது போல் அவர்கள் இந்த விஷயத்திற்கு அவர்கள் எதிர்வினையாற்றியதும் நல்ல விஷயம்தான். இன்னும் சிலர், ஓ மை கோஸ்ட் படத்தின் பிரமோஷனுக்காக இயக்குநர் நவீன் உள்ளிட்டோர் ஆடை குறித்து நான் கூறிய விஷயத்தை பெரிதுப்படுத்தியதாக கூறுகிறார்கள். அதெல்லாம் இல்லை. அவர்கள் எல்லாம் உண்மையிலேயே எதிர்ப்பு தெரிவித்துதான் கருத்துகளை வெளியிட்டார்கள். நான் அந்த விழாவில் புகைப்பிடிக்க வேண்டாம், குடிக்க வேண்டாம் என்றெல்லாம் நல்ல விஷயங்களை சொல்லியிருக்கேன். அதை பாலோ செய்யுங்கள் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications