அடடே இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..நரேந்திர மோடியாக நடிக்கும் சத்யராஜ்? அப்போ அமித்ஷா கேரக்டரில் யாரு?
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாக இருக்கும் திரைப்படத்தில் அவரது வேடத்தில் பிரபல நடிகர் சத்யராஜ் நடிக்க இருப்பதாகவும், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகவிருக்கும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் என தகவல்கள் உலாவுகின்றன.
தமிழ் திரையுலகில் வில்லனாக அறிமுகமாகி நாயகனாக உயர்ந்து தற்போது குணச்சித்திர வேடங்களில் கலக்கி வருபவர் நடிகர் சத்யராஜ். படங்களில் நாயகனாக மட்டுமல்லாது தனது பாத்திரங்களின் வழியே பெரிய சிந்தனைகளையும் பரப்பியவர்.

கிண்டல் கேலி கொண்ட அவரது பாத்திரங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தவை. அமைதிப்படை போன்ற ஒரு அரசியல் படத்தை இனி தமிழ் சினிமாவில் எடுக்கவே முடியாது என்னும் அளவுக்கு அந்த படத்தில் ஒரு தேர்ந்த அரசியல்வாதியாக தனது நடிப்பின் மூலம் பட்டையை கிளப்பி இருப்பார் சத்யராஜ்.
மணிவண்ணனின் இயக்கமும், வசனங்களும் இந்த திரைப்படத்தை தமிழ் சினிமாவின் கல்ட் கிளாசிக் திரைப்படமாக இன்று வரை உச்சத்தில் வைத்துள்ளது. இந்த நிலையில் பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் உலக அளவில் கட்டப்பா கேரக்டர் மூலம் பிரபலமானார் சத்யராஜ். இதை அடுத்து பல்வேறு தென்னிந்திய மொழி படங்களிலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. சமீபத்தில் சில படங்களில் நடித்திருந்த சத்யராஜ் தற்போதும் பிஸியாகவே இருக்கிறார்.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து திரைப்படம் ஒன்று உருவாக உள்ளது. ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடியின் வரலாற்றை மையமாக வைத்து விவேக் ஓபராய் நடித்திருந்த பிஎம் நரேந்திர மோடி, மன் பைரகி, மோடி தி ஜர்னி ஆப் காமன் மேன், மோ ககா கா கவுன் உள்ளிட்ட படங்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் தற்போது புதிதாக பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு ஒரு திரைப்படம் உருவாக இருக்கிறது. பாலிவுட்டில் தயாராகும் இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கும் எனவும், படப்பிடிப்பும் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் முன்னமே சொன்னது போல தனது பாத்திரங்களில் கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு உள்ளிட்ட பெரியாரிய கொள்கைகளை வெளிப்படையாக பேசி வந்த நடிகர் சத்யராஜ், பெரியார் படத்தில் அவரது கதாபாத்திரத்தை ஏற்று நடித்து இருந்தார். பெரியார் இப்படித்தான் இருந்திருப்பார் என்று சொல்லும் அளவுக்கு நடிகர் சத்யராஜின் நடிப்பு அந்த படத்தில் பேசப்பட்டது.
அந்த அளவுக்கு பெரியார் மீது பற்று கொண்ட நடிகர் சத்யராஜ் பாஜகவையும் விமர்சித்து வந்திருக்கிறார். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் பாத்திரத்தில் அவர் நடிக்க உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் கோலிவுட் உலகில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் வரலாற்று படத்தில் சத்யராஜ் நடிப்பது உண்மைதான் எனவும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாக இருப்பதாக அவர் தரப்பு விளக்கம் அளித்து இருக்கிறது. இந்நிலையில் மோடி கேரக்டரில் சத்யராஜ் என்றால், அமித் ஷா கேரக்டரில் யார் நடிப்பார்? எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications