திமுகவில் இணைந்த சத்யராஜ் மகள் திவ்யாவிற்கு முக்கிய பொறுப்பு.. கட்சி தலைமை அறிவிப்பு
சென்னை: கடந்த மாதம் திமுகவில் இணைந்த நடிகர் சத்யராஜ் மகள் திவ்யாவிற்கு, திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கட்சியில் இணைந்த ஒரு மாதத்திற்கு உள்ளாக அவருக்கு முக்கிய பொறுப்பை திமுக தலைமை அளித்துள்ளது. திவ்யா சத்யராஜுக்கு திமுகவினர் பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சத்யராஜ். இவர் திராவிட கருத்துகளால் ஈர்க்கப்பட்டவர். இவர் மேடைகள் தோறும் பெரியார் கருத்துகளை முழங்கி வருகிறார். நடிகர் சத்யராஜுக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், திவ்யா என்ற மகளும், சிபிராஜ் என்ற மகனும் உள்ளனர்.

இதில் சிபிராஜ் சினிமாவில் நடிக்க தொடங்கினார். அவர் ஹீரோவாக நடித்தார். மகள் திவ்யா சினிமாவில் இருந்து விலகியே இருந்தார். திவ்யா பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ஆவார். அரசியல், சமூக விஷயங்களில் ஆர்வம் கொண்டவராக இருந்த திவ்யா, கடந்த மாதம் 19 ஆம் தேதி திமுகவில் இணைந்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் அவர் திமுகவில் சேர்ந்தார். திமுகவின் கட்சி கொடியான கருப்பு - சிவப்பை பிரதிபலிக்கும் வகையில் கருப்பு - சிவப்பு நிற சேலை அணிந்து அவர் திமுகவில் இணைந்தார். அப்போது அவருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும் என சொல்லப்பட்டது. எனினும், அது குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில்தான், கட்சியில் சேர்ந்து சுமார் 1 மாதத்திற்கு உள்ளாக சத்யராஜ் மகள் திவ்யாவிற்கு பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் சத்யராஜின் மகள் திவ்யாவுக்கு திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் துணைச் செயலாளர் பதவியை திமுக அளித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ளது.
திமுகவில் தகவல் தொழில் நுட்ப அணியின் துணை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில் திவ்யா சத்யராஜுக்கு திமுகவினர் பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications