பாஜகவில் இணைந்தார் நடிகர் செந்தில்.. தமிழகத்தில் தாமரையை மலர வைக்க பிரபலங்களை இழுத்து போடும் பாஜக!
சென்னை: அமமுகவில் இருந்த பிரபல காமெடி நடிகர் செந்தில் இன்று பாஜகவில் இணைந்தார்.அவருக்கு எல்.முருகன் பாஜக உறுப்பினர் அட்டையை வழங்கினார்.
Recommended Video
அதிமுகவில் இருந்து டி.டி.வி தினகரனின் அமமுகவுக்கு தாவிய செந்தில் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.
இந்த முறை தமிழகத்தில் காலூன்றியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ள பாஜக, மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர், நடிகை, பிரபலங்களை கட்சிக்குள் இழுத்து போட்டு வருகிறது.

தேர்தல் பணிகளில் கட்சிகள்
தமிழக சட்டசபை தேர்தலில் அனைத்து கட்சிகளும் விறுவிறுப்பாக களம் காண்கின்றன. திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை ஏறக்குறைய முடித்து விட்டன. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்டன. அதிமுக கூட்டணியில் பாமக, பாஜகவுக்கு தொகுதிகள் ஒதுக்கி தானும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அதிமுக.

பாஜகவில் இணைந்த செந்தில்
அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட காட்சிகள் வேட்பு மனு தாக்கலுக்கு தயாராகி வருகின்றன. இந்த நிலையில் அமமுகவில் இருந்த பிரபல காமெடி நடிகர் செந்தில் இன்று பாஜகவில் இணைந்தார். தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார் செந்தில். அவருக்கு பாஜக உறுப்பினர் அட்டையை எல்.முருகன் வழங்கினார்.

அப்ப அதிமுக-அமமுக, இப்போ பாஜக
தமிழ் திரையுலகில் செல்வாக்கு மிக்க காமெடி நடிகராக விளங்கிய நடிகர் செந்தில் தனது அரசியல் பயணத்தை அதிமுகவில் தொடங்கினார். அதிமுகவில் நட்சத்திர பேச்சாளராக வலம் வந்த அவர் தேர்தல் நேரங்களில் கட்சிக்கு ஆதரவாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். பின்னர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பின்பு, அதிமுகவில் குழப்பம் நிலவியபோது டி.டி.வி தினகரனின் அமமுகவுக்கு தாவினார் செந்தில். தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.

விலக காரணம் என்ன?
சட்டமன்ற தேர்தலில் செந்திலுக்கு, டி.டி.வி தினகரன் சீட் கொடுக்காததே அவர் அங்கு இருந்து விலகி பாஜகவில் இணைய காரணம் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் இந்த முறை காலூண்றியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் பாஜக உள்ளது. இதனால் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர், நடிகை, பிரபலங்களை கட்சிக்குள் இழுத்து போட்டு வருகிறது.

நட்சத்திர பட்டாளம் நிறைந்த பாஜக
தமிழக கட்சிகளிலேயே அதிக நட்சத்திர பட்டாளம் நிறைந்த பாஜகவில் குஷ்பு, கவுதமி, காயத்ரி ரகுராம், பெப்சி சிவா. கங்கை அமரன், விஜயகுமார், நெப்போலியன், கஸ்தூரி ராஜா, நடிகை நமீதா, ராதாரவி, சிவாஜி மகன் ராம்குமார், பஞ்சு அருணாச்சலம் மகன் சுப்பு, இயக்குநர் பேரரசு, இசையமைப்பாளர் தினா, தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி, நடிகர்கள் ஆர்.கே.சுரேஷ், கணேஷ்கர், பாபு கணேஷ், வெங்கடேஷ், பவர் ஸ்டார், பொன்னம்பலம், எஸ்.வி.சேகர், குட்டி பத்மினி, மதுவந்தி, ஜெயஸ்ரீ, பாலாம்பிகா, சங்கீதா உள்ளிட்ட ஒட்டுமொத்த சினிமா பிரபலங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications