நடிகர் செந்திலுக்கு அமமுகவில் டிடிவி தினகரன் கொடுத்த சூப்பர் பதவி.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
Recommended Video
சென்னை: நடிகர் செந்திலுக்கு அமமுகவில் முக்கிய பதவியான அமைப்பு செயலாளர் பதவி கொடுத்துள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். இந்த விவகாரம் தான் இப்போது அரசியல் அரங்கில் பரபரப்பாக பேசப்படுகிறது.
சசிகலா சிறை சென்ற பின்னர் அதிமுகவில் ரீ என்ட்ரியான டிடிவி தினகரன் சில காலங்களிலேயே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக செயற்குழு கூட்டத்தில் இருந்து நீக்கப்பட்டார். இதன் காரணமாக அமமுக என்ற தனிக்கட்சி ஆரம்பித்த டிடிவி தினகரன் சுயேட்சையாக போட்டியிட்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆர்கே நகர் தொகுதியில் வெற்றி பெற்றார்.

இதன் காரணமாக டிடிவி தினகரனின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது, அதிமுக எம்எல்ஏக்கள் 18 பேர் டிடிவி தினகரன் பக்கம் தாவினர். இதேபோல் பலரும் அதிமுகவில் இருந்து அமமுகவிற்கு தாவினர்.
இவை எல்லாம் அண்மையில் நடந்த லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் வரைதான். அந்த தேர்தலில் படுதோல்வி அடைந்தது தினகரனின் அமமுக கட்சி. இதனால் அதிர்ச்சி அடைந்த பலர் அதிமுகவிற்கும் திமுகவிற்கு தாவினர் அப்படி தாவியவர்களில் முக்கியமானவர் தங்கதமிழ்செல்வன். இவர் திமுகவிற்கு தாவினார்.
இதேபோல் அமமுகவில் இருந்து பல முக்கிய நிர்வாகிகள் வெளியேறி அதிமுகவில் இணைந்தனர். சிலர் திமுகவில் இணைந்தனர். இப்படி படிப்படியாக பலரும் கட்சியை விட்டு தாவி வரும் நிலையில் தினகரனின் நம்பிக்கைக்கு உரியவராக பார்க்கப்பட்ட புகழேந்தியும் தனது ஆதரவாளர்களுடன் வேறு கட்சிக்கு தாவுவதற்கு தயாராவது போன்ற வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த சூழலில் தான் அமமுகவில் அமைப்பு செயலாளர் பொறுப்பை நடிகர் செந்திலுக்கு டிடிவி தினகரன் வழங்கி உள்ளார். டிடிவி தினகரனின் கட்சியில் அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் மாற்று கட்சிக்கு தாவி வரும் விவகாரம் முக்கிய விவாதமாக சமூக வலைதளங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications