"டிவிட்டராவது கிவிட்டராவது".. செந்தில் அண்ணே.. அப்படில்லாம் சொல்லாதீங்க.. கண்டிப்பா வாங்கண்ணே!
சென்னை: ஒரே ஒரு வாழைப்பழத்தை வைத்து.. ஒஹோன்னு உச்சிக்குப் போன சூப்பர் நடிகர்.. வேறு யாருமே இருக்க முடியாது.. நம்ம செந்தில் தவிர. அவருக்கு மட்டுமல்ல காமெடி சூப்பர் ஸ்டார் கவுண்டமணியையும் சேர்த்து இந்த வாழைப்பழம் உச்சிக்குக் கொண்டு போனது. எல்லாப் புகழும் கங்கைஅமரனுக்கே!
Recommended Video
நீண்ட காலமாகவே இந்த ஜோடி நடிக்காமல் உள்ளது. இணைந்து நடித்து பல காலமாகி விட்டது. குலுங்க குலுங்க நம்மைச் சிரிக்க வைத்த இந்த காமெடி இரட்டையர்கள் இப்போது சூப்பர் ஓய்வில் உள்ளனர். செந்திலாவது இடையில் ஒரு டிவி சீரியலில் நடித்து வந்தார். தானா சேர்ந்த கூட்டம் படத்திலும் நடித்திருந்தார். கவுண்டமணி சுத்தமாக நடிப்பதே இல்லை.
இவர்களின் அதிரடி சரவெடி காமெடி காட்சிகளை இப்போது பார்த்தாலும் வயிறு வெடிக்க சிரிப்பது உறுதி. வடிவேலு புண்ணியத்தால் இடையில் இவர்கள் விட்ட கேப்பை நம்மால் நிரப்ப முடிந்தது. இப்போது வடிவேலுவையும் ஆளைக் காணோம்.

செந்தில் பெயரில் டிவிட்டர்
இந்த நிலையில்தான் திடீரென செந்தில் பெயரில் ஒரு டிவிட்டர் பக்கம் ஓப்பனாகி ரசிகர்களை குபுக் சந்தோஷத்தில் ஆழ்த்தியது. நடிகர் செந்தில் தனது லெட்டடர் பேடில் நான் டிவிட்டருக்கு வந்து விட்டேன் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. இதனால் ரசிகர்கள் ஹேப்பியாகி விட்டனர். அட ஏம்ப்பா நீங்க வேற.. நான் அவன் அல்ல என்று சொல்லி விட்டார் செந்தில். கூடவே மாஸ்க் போட மறக்காதீங்கன்னும் மெசேஜ் சொல்லிட்டுப் போயிட்டார்.

டுபாக்கூர் கணக்கு
டிவிட்டராவது, கிவிட்டராவது.. எனக்கு போன் வந்தா எடுத்து பேச மட்டும்தான் தெரியும். இதெல்லாம் தெரியாதுங்க என்று தனக்கே உரிய மதுரைக்கார வெள்ளந்தி செந்திலாக ஒரு வீடியோவையும் போட்டு விட்டார். இதன் மூலம் டிவிட்டரில் வெளியான செந்தில் கணக்கு டுபாக்கூர் என்று தெரிய வந்துள்ளது. இதனால் செந்தில் ரசிகர்களும் கூட ஏமாந்துதான் போய் விட்டனர்.

டிவிட்டருக்கு வாங்கண்ணே
சரி அதை விடுங்க.. செந்தில் சார்.. எதுக்கு சார்ன்னுட்டு.. நம்ம பாசத்துக்குரிய அண்ணன் அவர்.. அப்படியே கூப்பிடுவோமே.. செந்திலண்ணே.. நீங்க கண்டிப்பா டிவிட்டருக்கு வரணும்.. அதுக்கு மட்டுமல்ல. பேஸ்புக்குக்கும் வாங்க, மறக்காம யூடியூபுக்கும் கூட வாங்க.. எல்லோரும் உங்களுக்காக காத்திருக்கோம். கொஞ்ச நஞ்ச காமெடியா பண்ணி வச்சிருக்கீங்க. நீங்களும் கவுண்டமணியும்.. அந்தக் கதையெல்லாம் நீங்க எங்களுக்குச் சொல்லணும்.. அதைக் கேட்டு நாங்க சந்தோஷப்படணும்.

சிரிக்க வைக்கும் பாடி லாங்குவேஜ்
செந்தில் என்ன வசனம் பேசினாலும் அதை விட அதிகமாக மக்கள் பார்த்து ரசித்து சிரிப்பது அவரது பாடி லாங்குவேஜ்தான. முக பாவனைகள், சேஷ்டைகள் என மனிதர் பேசாமலேயே நம்மை சிரிக்க வைக்க தயாராகி விடுவார். டயலாக் டெலிவரியெல்லாம் பிறகுதான். கூடவே டைமிங்கும் சேர்ந்து கொள்ள.. அதை விட கவுண்மணியின் "லெக் டாக்"கும் இணையும்போது அந்த இடமே களேபரமாகி விடும்.

கதை கேட்க நாங்க ரெடி
இரு இமயங்களாக ஒரு காலத்தில் வலம் வந்தவர்கள் எம்ஜிஆரும், சிவாஜியும், அதேபோல பின்னாளில் வலம் வந்தவர்கள் ரஜினியும் கமலும். அவர்களுக்கு நிகரான காமெடி கிங்குகள் நீங்களும் கவுண்டமணியும். உங்களுக்காக மட்டுமே ஓடிய படங்கள்தான் எத்தனை.. எத்தனை.. அதெல்லாம் பொற்காலம். உங்க ரெண்டு பேருக்கும் இடையிலான அந்த நட்பு, அடிச்சாலும் பிடிச்சாலும் அண்ணன் தம்பி டா என்று பெருமையோடு கூறிக் கொள்ளும் உங்கள் பாசம்.. இந்தக் கதையெல்லாம் எங்களுக்குச் சொல்லுங்கண்ணே.

கதை சொல்றீங்க
அதனால, நீங்க கண்டிப்பாக டிவிட்டருக்கு வர்றீங்க.. யூடியூபுக்கு வர்றீங்க.. எல்லா சமூக வலைதளத்திற்கும் விசிட் பண்றீங்க.. உங்க கதையெல்லாம் சொல்றீங்க.. சுவாரஸ்யமா கேட்க நாங்க காத்திருக்கோம்.. ஏமாத்திடாதீங்க.. இது உங்களோட கோடிக்கணக்கான ரசிகர்களின் சார்பாக நாங்க வைக்கும் அன்பு + உரிமையான வேண்டுகோள்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications