Sivaji ganesan: சிவாஜி கணேசன் நினைவு நாள்.. "நவசர நாயகன்" ஐயாவுக்கு புகழஞ்சலி.. சீமான் பெருமிதம்
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சீமான் புகழாரம் சூட்டி உள்ளார்
சென்னை: நமது ஐயா நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் நினைவுநாளான இன்று, அந்த மகத்தான மேதைக்கு பெருமையோடு நம் புகழ் வணக்கத்தை செலுத்துவோம் என்று சீமான் நெகிழ்வுடன் கூறியுள்ளார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 21வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. பராசக்தி படம் வெளிவந்ததில் இருந்தே, சிவாஜி + நடிப்பு இரண்டும் பிரிக்கவே முடியாத சொல்லாக அமைந்துவிட்டது..
ஒவ்வொரு கேரக்டர்களுக்குமான பாடிலேங்குவேஜ் உருவாக்குவது, அதற்கேற்றவாறு, வசனங்களில் மாடுலேஷன்களை கொண்டு வந்து கேரக்டர்களில் வெளிப்படுத்துவது சாதாரண விஷயமல்ல.

செவாலியே
திரை நடத்திரங்களிலேயே வித்தியாசமான துருவ நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார் சிவாஜி கணேசன்.. நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி, சிம்ம குரலோன் என மக்களால் அழைக்கப்பட்ட சிவாஜி, சர்வதேச அளவில் சிறந்த நடிகர் விருதை வென்ற முதல் இந்திய நடிகர் என்ற பெருமையையும் பெற்றவர்.. பத்மஸ்ரீ, பத்மபூஷன் மற்றும் திரைப்பட துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது உள்ளிட்ட விருதுகளையும் வென்றுள்ளார்..

சீமான் புகழாரம்
பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது பெற்ற முதல் இந்திய நடிகரும் நம் சிவாஜி கணேசன்தான்.. கடந்த 2001ம் ஆண்டு இதே நாள், தன்னுடைய 72வது வயதில் உயிரிழந்தார்.. அவரது நினைவை, ரசிகர்களும், தலைவர்களும், பொதுமக்களும் இன்று சிறப்பித்து வருகின்றனர்.. அந்த வகையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும், சிவாஜி கணேசனுக்கு புகழாரம் சூட்டி உள்ளார். இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பதிவில் சொல்லி உள்ளதாவது:

உலக சிற்பி
தன்னிகரற்ற கலைத்திறனால் நாட்டுமக்களின் உள்ளத்திலும் இல்லத்திலும் ஒருசேர நிறைந்தவர்! சிம்மக்குரலால் செந்தமிழ்ப் பேசி அன்னைத் தமிழுக்கு அழகு சேர்த்தவர்! வணங்கும் கடவுளையும், வரலாற்று நாயகர்களையும், விடுதலைப் போராட்ட வீரர்களையும் நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்திய கலை உலகச் சிற்பி! தமிழ்ப் பேரினத்தின் பெருமைமிகு கலை அடையாளம்!

புதையல்
நடிகர் திலகம் என எல்லோராலும் பெருமையோடு அழைக்கப்பட்ட நவரச நாயகன்! நமது ஐயா நடிகர் திலகம் சிவாஜி கணேசன்அவர்களின் நினைவுநாள் இன்று (21-07-2022) அந்த மகத்தான மேதைக்கு பெருமையோடு நம் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்!" என்று குறிப்பிட்டுள்ளார்... இந்த பதிவுக்கு பலரும் திரண்டு வந்து, புகழஞ்சலியை சிவாஜி கணேசனுக்கு செலுத்தி வருகின்றனர்.. சிவாஜி நமக்கு கிடைத்த புதையல் என்று பதிவிட்டு வருகின்றனர்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications