Actor Sivakumar: வி.சேகர் உடலை பார்த்ததும்! கண்ணீர் விட்டு கதறிய சிவக்குமார்! மகன், மனைவிக்கு ஆறுதல்
சென்னை: இயக்குநர் வி.சேகரின் உடலை பார்த்ததும் சிவக்குமார் கதறி அழுத காட்சிகள் காண்போரை கலங்கச் செய்தது. இதய பிரச்சினை காரணமாக உயிரிழந்த சேகரின் உடல் அவரது வளசரவாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 நாட்களுக்கு மேலாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று மாலை காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
"நீங்களும் ஹீரோதான்" படத்தின் மூலம் 1990-இல் இயக்குநராக அறிமுகமான வி.சேகர், 'பொண்டாட்டி சொன்னா கேட்கணும்', 'விரலுக்கேத்த வீக்கம்', 'வரவு எட்டணா செலவு பத்தணா' உள்ளிட்ட குடும்ப படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை ஈர்த்தவர். வடிவேலுவையும் விவேக்கையும் ஒரே படத்தில் நடிக்க வைத்த பெருமைக்குரியவர்.
திருவண்ணாமலை அருகே உள்ள நெய்வாநத்தம் கிராமத்தில் எஸ்.வெங்கடேசன்- பட்டம்மாள் தம்பதிக்கு பிறந்த இவர், திருவண்ணாமலையில் பியூசி படித்தார். ஏவிஎம் ஸ்டுடியோவில் கருப்பு வெள்ளை 16 எம்.எம்.லேப்பில் உதவியாளராக 19 வயதில் வேலைக்கு சேர்ந்தார்.
பிறகு, மாநகராட்சி சுகாதாரத் துறையில் 15 ஆண்டுகள் பணிபுரிந்தார். வேலை செய்து கொண்டே மாலை நேரத்தில் நந்தனம் கலைக் கல்லூரியில் பி.ஏ.பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ. படிப்பை முடித்தார்.
பின்னர் பகுதி நேரமாக எடிட்டர் லெனினிடம் உதவியாளராக சேர்ந்தவர். இயக்குநர் கே.பாக்யராஜின் உதவியாளர் கோவிந்தராஜ் இயக்கிய "கண்ண தொறக்கணும்சாமி" படத்தில் உதவி இயக்குநராக இருந்தார்.
பிறகு கே.பாக்யராஜின் உதவியாளராக இரு ஆண்டுகள் கதை இலாகாவில் பணியாற்றினார். இவரது முதல் "நீங்களும் ஹீரோதான்". இந்த படம் வெற்றியடையவில்லை. இதையடுத்து சுகாதார பணிக்கே திரும்பினார். பின்னர் அங்கிருந்து வந்த அவர், 'பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்', 'ஒண்ணா இருக்க கத்துக்கணும்', 'பொறந்த வீடா புகுந்த வீடா', 'பார்வதி என்னை பாரடி', 'வரவு எட்டணா செலவு பத்தணா', 'நான் பெத்த மகனே', 'காலம் மாறிப் போச்சு', 'பொங்கலோ பொங்கல்', 'விரலுக்கு ஏத்த வீக்கம்' உள்ளிட்ட படங்களை இயக்கினார்.
தனது மாமா மகள் தமிழ்ச் செல்வியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மலர்க்கொடி என்ற மகளும் காரல் மார்க்ஸ் என்ற மகனும் உள்ளனர். கடந்த 10 நாட்களுக்கு முன்னர் இவருக்கு திடீரென நெஞ்சு வலி வந்து மயங்கி விழுந்தார்.
இதையடுத்து அவரை போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் சேர்த்தனர். இதயத்தில் அடைப்பு ஏற்பட்டு மூளைக்கு ரத்தம் செல்லாததால் அவர் கண்களை மூடியபடியே இருந்தார். அவரது உடல்நலம் தேறி வர வேண்டும் என பிரார்த்தனை செய்து கொள்ளுமாறு மகன், கேட்டுக் கொண்டார்.
இந்த நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி இயக்குநர் வி.சேகர் காலமானார். அவரது உடல் வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு இயக்குநர் பி.வாசு, ஆர்.கே. செல்வமணி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
வி.சேகரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த நடிகர் சிவக்குமார் வந்தார். அவரது மகன் காரல் மார்க்ஸிடம் விசாரித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் சொன்னதை கேட்டு சிவக்குமாருக்கு அழுகை வந்ததும், காரல் மார்க்ஸும் அவரை கட்டி பிடித்து அழுதார். பின்னர் சிவக்குமாரை பார்த்தும் சேகரின் மனைவி கதறி அழுதார். அவருக்கும் சிவக்குமார் ஆறுதல் கூறினார். வி.சேகரின் இயக்கத்தில், "பொறந்த வீடா புகுந்த வீடா" என்ற படத்தில் சிவக்குமார் நடித்திருந்தார். வி.சேகரின் உடல் நெய்வாநத்தம் கிராமத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு அவருக்கு உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்படுகின்றன.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications