தமிழர்கள் என்றதும் ஓடோடி வந்த சோனு சூட்.. ரஷ்யாவில் சிக்கியவர்களுக்கு தமிழகம் திரும்ப உதவி.. சல்யூட்

ரஷ்யாவில் சிக்கி இருந்த தமிழர்கள் நாடு திரும்ப சோனு சூட் உதவி செய்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஷ்யாவில் சிக்கி இருந்த தமிழர்கள் நாடு திரும்ப சோனு சூட் உதவி செய்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்குதல் தொடங்கியதில் இருந்தே இந்தியா முழுக்க மக்களுக்கு சோனு சூட் உதவி வருகிறார். அதிலும் தென்னிந்திய மக்களுக்கு அதிகமாக உதவி வருகிறார்.

மற்ற பாலிவுட் ஹீரோக்கள் போல இவர் சூப்பர் ஸ்டார் எல்லாம் கிடையாது. சாதாரண வில்லனாக இருந்தாலும் கூட, தன்னிடம் இருக்கும் பணத்தை வைத்து , கொரோனா காலத்தில் யாருக்கு எல்லாம் உதவி செய்ய முடியுமோ, உதவி செய்து வருகிறார்.

தமிழர்கள் உதவி

தமிழர்கள் உதவி

இந்த நிலையில்தான் அவர் தமிழர்களுக்கும் இதே போல் உதவி செய்துள்ளார். அதன்படி ரஷ்யாவில் சிக்கி இருந்த தமிழர்கள் நாடு திரும்ப சோனு சூட் உதவி செய்துள்ளார். ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் தங்கி இருந்த தமிழர்கள் இவர்கள். இவர்களில் பெரும்பாலான நபர்கள் மாணவர்கள். ரஷ்யாவிற்கு படிக்க சென்றவர்கள், லாக்டவுன் காரணமாக அங்கேயே சிக்கிக் கொண்டார்கள்.

மீட்டு வந்தார்

மீட்டு வந்தார்

மொத்தம் 90 பேர் மாஸ்கோவில் தங்கி இருந்தனர். இவர்கள் எல்லோரையும் மீட்டு சோனு சூட் தமிழகம் கொண்டு வந்து இருக்கிறார். இவர்களுக்காக சிறப்பு விமானத்தை ஏற்பாடு செய்து இருந்தார். அதன்படி 200 பேர் செல்ல கூடிய விமானத்தில் 91 தமிழர்கள் வந்த நிலையில், 109 காலி டிக்கெட்டுகளை சோனு சூட் சொந்த காசில் வாங்கியுள்ளார். மாணவர்கள் தங்கள் டிக்கெட்டுகளை சொந்த காசில்எடுத்துள்ளனர். இதனால் விமான நிறுவனம், சிறப்பு விமானத்தை இயக்கி உள்ளது. இதன்மூலம் அந்த மாணவர்களை சோனு சூட்சென்னை கொண்டு வந்து இருக்கிறார்.நேற்று காலை எல்லோரும் சென்னை வந்தனர்.

மக்கள் உதவி

மக்கள் உதவி

சோனு சூட் நிறைய தமிழ் படங்களில் நடித்து இருக்கிறார். இவர் தமிழ் திரை உலகில்தான் முதலில் அறிமுகம் ஆனார். மக்களுக்கு நடிகர் சோனு சூட் உதவி வருகிறார். அதனால் இவருக்கு தமிழர்கள் மீது எப்போதும் அதிக மதிப்பு உண்டு. மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து இவர் நாடு முழுக்க மக்களுக்கு உதவி வருகிறார்.லாக்டவுன் காரணமாக வெவ்வேறு இடங்களில் முடங்கிய பிற மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல இவர் உதவினார்.

 டீம் உருவாக்கி உள்ளார்

டீம் உருவாக்கி உள்ளார்

இதற்காக இவர் பேருந்து, லாரி என்று பெரிய அளவில் ஏற்பாடுகளை செய்து இருந்தார். தற்போது வெளிநாட்டில் இருந்து தமிழகம் திரும்ப தமிழர்களுக்கு உதவி உள்ளார். இதற்காக அவர் பெரிய அணியை உருவாக்கி இருந்தார். ஹெல்ப்லைன் நம்பர் கொடுத்து மக்களுக்கு அடுத்தடுத்து இவர் உதவி வந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+