தல தல என்று கத்திக்கொண்டே குதித்த சூரி.. பறக்க விட்ட தோனி.. தலையில் கைவைத்த ரோகித் - நீங்களே பாருங்க
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் த்ரில் வெற்றியை நடிகர் சூரி டிவி முன் துள்ளி குதித்து கொண்டாடும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது
Recommended Video
ஐ.பி.எல். 2022 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் ஆகிய 2 புதிய அணிகள் வருகை, முழு ஏலத்துக்கு பிறகு மாறிய கிரிக்கெட் அணிகளுடன் இந்த போட்டி நடந்து வருவதால் இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து இந்த தொடர் முற்றிலும் மாறுபட்டு காணப்படுகிறது.

சென்னை, மும்பை அணிகள்
முந்தைய ஐ.பி.எல். தொடர்கள் அனைத்திலும் கொடிகட்டிப் பறந்த முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இந்த ஐ.பி.எல். தொடரில் கடைசி இரண்டு இடங்களை பிடித்துள்ளன. முதல் 4 போட்டிகளில் இரு அணிகளும் போட்டிபோட்டு தோல்வியடைந்தது இரு அணி ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியாக அமைந்தது.

சென்னை - மும்பை போட்டி
சினிமாவில் விஜய் - அஜித் போல் பேசப்பட்டு வந்த மும்பை - சென்னை அணிகள் இரண்டும் இம்முறை தோல்வியில் போட்டிபோட்டு வந்தன. இந்த நிலையில், நேற்று மும்பை - சென்னை இடையிலான போட்டியை மையமாக கொண்டு சமூக வலைதளங்களில் மீம்களை ரசிகர்களை தெறிக்கவிட்டு வந்தனர். உச்சக்கட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று மும்பையில் இந்த போட்டி நடைபெற்றது.

கடைசி நேர பரபரப்பு
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 155 ரன்கள் எடுத்தது. இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணிக்கு வெற்றிபெற கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் விக்கெட் விழவே சென்னை அணி ரசிகர்களின் நம்பிக்கை குறைந்தது. 2-வது பந்தில் 1 ரன் மட்டுமே பிராவோ எடுத்த நிலையில் 4 பந்துகளில் 16 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை இருந்தது.

தோனியால் வென்ற சென்னை
இந்த நிலையில் 3 பந்துகளில் 12 ரன்கள் அடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னாள் கேப்டன் தோனி, கடைசி பந்தில் பவுண்டரி அடித்தால் வெற்றி என்ற நிலையில் அசத்தலான ஒரு பவுண்டரி அடித்து சென்னை அணிக்கு வெற்றியை தேடி தந்தார். பழைய கேப்டன் தோனியை மீண்டும் பார்த்த மகிழ்ச்சியில் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவுகளை குவித்து வருகின்றனர்.

சூரியின் கொண்டாட்ட வீடியோ
தோனியின் இந்த ஆட்டத்தை கண்டு பிரபலங்களும் உற்சாகத்தை பகிர்ந்துள்ளனர். அந்த வகையில்,
இந்த போட்டியை நேரலையில் பார்த்துக் கொண்டிருந்த நகைச்சுவை நடிகர் சூரி, கடைசி பந்தில் தோனி பவுண்டரி அடித்ததும் தொலைக்காட்சி முன்பாக துள்ளிக்குதித்து 'நம்ம தல நம்ம தல தான்' என்று சொல்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications