மூக்கில் ‘பவுடர்’.. ஈசிஆர் பார்ட்டியில் ’உயரமான’ நடிகை? சிக்கிய ஸ்ரீகாந்த்..சிக்க போகும் பிரபலங்கள்?
சென்னை: போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு இருப்பது சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தான் மட்டுமே போதைப் பொருள் பயன்படுத்தியதாக அவர் கூறியிருந்தாலும் மேலும் சில நடிகர்கள் சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் 'உயரமான நடிகை' ஒருவர் போதை பொருள் வழக்கில் சிக்கப் போகிறார் என கூறியிருக்கிறார் பிரபல பத்திரிகையாளரான தாமோதரன் பிரகாஷ்.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே போதைப்பொருள் புழக்கம் அதிகரித்திருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக சினிமா உலகத்தில் போதை பொருட்கள் தாராளமாக புழங்குவதாக அடிக்கடி புகார் எழுந்தன.
முன்னதாக திமுக முன்னாள் நிர்வாகியும் தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் மிகப்பெரிய போதை பொருள் நெட்வொர்க் உடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அமலாக்க துறையும் அவர் மீது வழக்கு பதிவு செய்தது.

இந்த விவகாரத்தில் பிரபல நடிகர்களான அமீர், விஜய் சேதுபதி ஆகியோரின் பெயர்கள் இழுக்கப்பட்ட போதிலும் தங்களுக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என விளக்கம் அளித்தனர். இந்த நிலையில் மீண்டும் பரபரப்புக்குள்ளாகி இருக்கிறது தமிழ் திரையுலகம். தெலுங்கு, கன்னடா திரையுலகில் போதை பொருள் வழக்குகளில் சிக்கி நடிகர் நடிகைகள் கைதாவது வாடிக்கையாக்கி வந்த நிலையில் முதன்முறையாக தமிழகத்தில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார்.
அதிமுக பிரமுகரான பிரசாத்தின் தயாரிப்பில் படம் நடித்ததாகவும் அந்த படத்தில் சம்பளத்துக்கு பதில் தனக்கு போதை பொருட்கள் வழங்கியதாக கூறியிருந்தார் ஸ்ரீகாந்த். கிட்டத்தட்ட 4 லட்சம் ரூபாய் வரை அவர் போதைப் பொருளுக்கு செலவிட்டுள்ளார். ஒரு கிராம் கொக்கைன் போதை பொருள் 12000 வரை விற்கப்பட்டிருக்கிறது. தற்போது ஸ்ரீகாந்த் கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டு இருக்கின்றனர்.
மேலும், போதை பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்த நடிகர்கள் யார் யார்? சினிமா பார்ட்டிகளில் போதை பொருட்கள் பயன்படுத்தப்பட்டதா? என்பது குறித்து விசாரிக்க இருக்கின்றனர். இதற்காக ஸ்ரீகாந்தை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தையும் நாட உள்ளனர். இதற்கிடையே போதை பொருள் விவகாரத்தில் மேலும் சில நடிகர் நடிகைகளுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார், இது தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
மேலும் போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் நிர்வாகி இடமும் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் மேலும் சில முக்கிய புள்ளிகள் சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சினிமாவில் அரசியலுக்கு வந்து தேசிய கட்சியில் இருக்கும் ஒரு உயரமான நடிகைக்கும் போதைப்பொருள் வழக்கில் தொடர்பு இருக்கிறது எனவும், விரைவில் அவர் விசாரணை வளையத்திற்குள் வரலாம் என கூறி இருக்கிறார் பிரபல பத்திரிக்கையாளரான தாமோதரன் பிரகாஷ். தனது சமூக வலைதள பக்கத்தில் அந்த நடிகையின் புகைப்படத்துடனே அவர் பதிவிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையின் பிரபலமான ஹோட்டல்கள், பார்கள், பப்புகள், ரெஸ்ட்ரோ பார்கள், ஈசிஆர் சாலையில் உள்ள பண்ணை வீடுகளில், சனிக்கிழமை இரவு நேரங்களில் பார்ட்டிகள் அதிக அளவு நடப்பதாகவும், அதில் பல திரை பிரபலங்கள், தயாரிப்பாளர்கள் கலந்து கொள்ளும் நிலையில் போதை பொருட்களும் வெளிநாட்டு மதுபானங்களும் அதிக அளவில் புழங்குவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே சில சினிமா பிரபலங்கள் போதைப்பொருள் வழக்குகளில் சிக்கி இருக்கும் நிலையில், விசாரணையை தீவிரப்படுத்தி வரும் போலீசார் சந்தேக நடிகர் நடிகைகளுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications
