பிரபல தமிழ் நடிகருக்கு புற்றுநோய்! 4ஆம் கட்டம்! பணம் இல்லாமல் தவிப்பு! ரசிகர்கள் அதிர்ச்சி!
சென்னை: குணச்சித்திரம் மற்றும் காமெடி ரோல்களில் நடித்த சூப்பர் குட் சுப்பிரமணி புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு 4ஆம் நிலை என சொல்லப்படும் advanced stage புற்றுநோய் இருக்கிறது. இவர் தனக்கு கொடுக்கப்படும் கேரக்டரில் நன்றாக நடித்திருப்பார்.
சினிமா துறை என்பது யாரையும் உச்சாணிக் கொம்பில் உட்கார வைக்கும் மேஜிக்கல் சீட்டாகும். இங்கு திறமை இருந்தால் ஓவர் நைட்டில் பிரபலம்தான். இப்படி சினிமா கனவுகளுடன் சொந்த கிராமம், தாய், தந்தை, உடன் பிறந்தவர்களை விட்டுவிட்டு சென்னைக்கு வந்து பசியும் பட்டினியுமாக வாய்ப்பு தேடும் நிலை உள்ளது.

அவ்வாறு வாய்ப்பு தேடி நல்ல நிலையில் இருப்பவர்கள் ஏராளம். அப்படிப்பட்ட கனவுகளுடன் சினிமாவுக்குள் வந்தவர்தான் சூப்பர் குட் சுப்பிரமணி! இவர் இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன் சென்னைக்கு வந்தார். சூப்பர் குட் பிலிம்ஸில் பணியாற்றியதால் இவர் சூப்பர் குட் சுப்பிரமணி என அழைக்கப்படுகிறார். இவர் பல படங்களில் உதவி இயக்குநராக நடித்துள்ளார்.
அஜித்தின் சிட்டிசன் படத்தில் இணை இயக்குநராக பணியாற்றியவர். கதையை தயார் செய்துவிட்டு சூப்பர் குட் பிலிம்ஸில் கொடுத்து ஓகே வாங்கியிருந்தார். ஆனாலும் அவரால் இயக்குநராக முடியவில்லை. எனினும் சினிமாவில் அவர் குணச்சித்திரம், காமெடி ரோல்களில் நடித்து வந்தார்.
காலா, பரியேறும் பெருமாள், பிசாசு, ஜெய் பீம், வானம் கொட்டட்டும், ஹீரோ, அருவம் , கூர்கா, ரஜினிமுருகன், அழகர்சாமியின் குதிரை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் ஏற்ற கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருந்தார். அதிலும் பரியேறும் பெருமாள், ஜெய்பீம் படங்களில் அவர் மிகச் சிறந்த நடிப்பை வெளியப்படுத்தியிருந்தார்.
அவர் கடைசியாக பரமன் படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு புற்றுநோய் 4 ஆம் கட்டத்தில் இருப்பதும், அவர் கடுமையான நிதி நெருக்கடியால் போராடி வருவதும் தெரியவந்துள்ளது.
-
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications