நடிகர் சூர்யாவின் தெளிவு.. விஜய்க்கு பதிலடியா?முதல் மதிப்பெண் பார்த்து அகரம் மாணவர்களுக்கு உதவலையாம்
சென்னை: நடிகர் விஜய் தொகுதி அளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு உதவிகளை வழங்கிய நிலையில், முதலிடம் பார்த்து தாங்கள் கல்வி உதவித் தொகை வழங்கவில்லை என நடிகர் சூர்யா தெரிவித்து இருக்கிறார்.
நடிகர் சூர்யா, அகரம் பவுண்டேசன் மூலமாக கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பொருளாதாரத்தில், சமூகத்தில் பின் தங்கிய ஏழை, எளிய மாணவர்களுக்கு உயர்கல்வி கற்க உதவி செய்து வருகிறார். இவரது இந்த சேவையின் மூலமாக ஆயிரக்கணக்கான பின் தங்கிய, கிராமபுற பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் இன்று பட்டதாரிகளாகி இருக்கிறார்கள்.

அவர்களில் பலர் இன்று அரசு பணிகள் உட்பட பல்வேறு நல்ல பணிகளில் உள்ளனர். சூர்யாவின் தந்தை சிவக்குமார் அறக்கட்டளை சார்பில் 44 ஆண்டுகளுக்கு முன் பொதுத்தேர்வுகளில் சாதித்த மாணவ மாணவிகளுக்கு உதவிகளை வழங்க தொடங்கினார். அந்த வகையில் இன்று நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட நடிகர் சூர்யா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "44 ஆண்டுகளாக சிவக்குமார் அறக்கட்டளை சார்பில் 10, 12 ஆம் வகுப்பில் சாதித்த மாணவ மாணவிகளுக்கு உதவிகள் வழங்கப்படுகின்றன. அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விழா இது. அப்பா 30 ஆண்டுகளாக நண்பர்களுடன் இதை நடத்தி வந்தார். அதன் பின்னர் அகரம் இதை எடுத்து நடத்தி வருகிறது.
இன்னும் பின் தங்கிய கிராமங்களை சேர்ந்த மாணவர்கள், அரசுப் பள்ளி மாணவர்கள், முதல் தலைமுறை மாணவர்களுக்கு வழங்கி வருகிறோம். அவர்கள் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. எந்த சூழலில் இருந்து படித்து முடித்து இந்த மதிப்பெண் வாங்கி உள்ளார்கள் என்பதை பார்த்து அந்த மாணவர்களுக்கு ஊக்கமும் மரியாதையும் அளிக்கும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அத்தனை மாவட்டங்களில் இருந்தும் அவர்களை தேர்வு செய்தோம்.
அகரம் தொடங்கி 17 ஆண்டுகள் ஆகிவிட்டது. விதை திட்டம் ஆரம்பித்த 14 ஆண்டுகள் ஆகிவிட்டன. 5,200 மாணவர்கள், மாணவிகளை கல்லூரியில் சேர்க்க முடிந்தது. இவர்கள் எல்லோரும் முதல் தலைமுறை மாணவர்கள், அரசு பள்ளி மாணவர்கள், தமிழ் மட்டுமே படித்த மாணவர்கள். இதில் மேலும் அழகான விசயம் என்னவென்றால் 3 ஆண்டுகளாக அகரம் அரசுடன் இணைந்து இடைநின்ற மாணவர்களை கல்லூரிக்கு அனுப்பும் வாய்ப்பை பெற்றது.
இதன் மூலம் சுமார் 1 லட்சம் மாணவ மாணவிகளை பள்ளி, கல்லூரியில் சேர்க்க முடிந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் 14 ஆண்டுகளில் 5000 மாணவ மாணவிகளைதான் சேர்க்க முடிந்தது. அரசுடன் சேரும்போது 3 ஆண்டுகளில் 1 லட்சம் பேரின் வாழ்க்கையை மாற்ற முடிந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அகரம் எல்லோருக்குமானது." என்றார்.
நடிகர் விஜய் கடந்த வாரம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தொகுதி அளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு ஒரு பக்கம் நல்ல வரவேற்பு இருந்தாலும் மாவட்ட அளவில், கல்வி மாவட்ட அளவில் விருது வழங்காமல் தொகுதியில் அளவில் மாணவர்களை தேர்ந்தெடுப்பது அரசியல் நோக்கத்திற்காக என்றே பேச்சுக்கள் எழுந்தன.
குறிப்பாக திறமையையும், சூழலையும் விட்டுவிட்டு மதிப்பெண்ணை நோக்கி மாணவர்களை தள்ளும் வகையில் இச்செயல் இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில்தான் 17 ஆண்டுகளாக மாணவ மாணவிகளுக்கு உதவி வரும் நடிகர் சூர்யா மதிப்பெண் பார்த்து உதவவில்லை என்று கூறியுள்ளார்.
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு












Click it and Unblock the Notifications