களமிறங்கிய ரசிகர்கள்.. 100 நாட்களாக தெரு தெருவாக ஏழைகளுக்கு உதவி.. அசர வைத்த நடிகர் சூர்யா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் தெரு ஓரங்களில் வசிக்கும் மக்களுக்கு நடிகர் சூர்யா சார்பாக அவரின் ரசிகர்கள் உதவி செய்து உள்ளனர்.

கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவில் ஏழைகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிலும் லாக்டவுன் காரணமாக ஏழைகள், தினக்கூலிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அதிலும் சென்னையில் தொடர் லாக்டவுன் காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தினசரி உணவுக்கு கூட வழி இல்லாத நிலைக்கு அவர்கள் சென்று இருக்கிறார்கள்.

சூர்யா உதவி

சூர்யா உதவி

இந்த நிலையில் சென்னையில் இப்படி கஷ்டப்படும் மக்களுக்கு உதவ நடிகர் சூர்யா மற்றும் அவரின் ரசிகர்கள் களமிறங்கி உள்ளனர். சென்னையில் பல்வேறு இடங்களில் தெரு ஓரங்களில் வசிக்கும் மக்களுக்கு நடிகர் சூர்யா சார்பாக அவரின் ரசிகர்கள் உதவி செய்து உள்ளனர். அதிலும் ஒரு நாள் செய்யப்பட உதவி இல்லை இது. கடந்த 100 நாட்களாக செய்யப்பட்ட உதவி ஆகும்

எங்கே செய்தனர்

எங்கே செய்தனர்

முக்கியமாக வடசென்னையில் இருக்கும் மக்களுக்கு உதவி செய்து இருக்கிறார். சூர்யாவும் அவரின் வடசென்னை ரசிகர் மன்றமும் இணைந்து இந்த பணிகளை செய்து உள்ளனர். 100 நாட்களும் மக்களுக்கு சென்று உணவு பொட்டலங்களை வழங்கி உள்ளனர். மூன்று வேளையும் தேடி தேடி உணவுகளை இவர்கள் வழங்கி உள்ளனர். கடந்த 100 நாட்களில் மட்டும் 30 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டு உள்ளது.

எத்தனை பேர்

எத்தனை பேர்

எல்லோரும் சென்னையில் வீடு இல்லாமல், குடிசைகள், பிளாட்பராத்தில் தங்கி இருக்கும் மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பணியில் 100 க்கும் அதிகமான சூர்யா ரசிகர்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். முக்கியமாக சென்னையில் திருவிக நகர், வடபழனி , புளியம்தோப்பு, அயனாவரம் பகுதிகள், மூலக்கடை ஆகிய பகுதிகளில் பலருக்கு உதவி உள்ளனர்.

மெரினாவில் உதவி

மெரினாவில் உதவி

மெரினாவில் இருக்கும் மக்களுக்கும் தேடி சென்று இவர்கள் உதவி செய்து உள்ளனர். சூர்யா ரசிகர்கள் இதோடு முடிக்காமல் வரும் நாட்களிலும் இதேபோல் உதவி செய்ய திட்டமிட்டு உள்ளனர். சூர்யா ரசிகர்களின் இந்த செயலை எல்லோரும் இணையத்தில் பாராட்ட தொடங்கி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+