“ஆடு" போட்டோ அண்ணாமலைக்கு போடல.. வார்ரூம் “நாய்கள்” - அவர் எனக்கு சமம் இல்ல! கொந்தளித்த எஸ்வி சேகர்
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை மனதில் வைத்து ஆடு புகைப்படத்தை தான் பதிவேற்றம் செய்யவில்லை என நடிகர் எஸ்வி சேகர் தெரிவித்து உள்ளார். வார் ரூம் வைத்துக்கொண்டு அனைவரையும் தகாத முறையில் இழிவுபடுத்தி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டி இருக்கிறார்.
தமிழ்நாடு பாஜகவின் மூத்த உறுப்பினரும், நடிகருமான எஸ்.வி.சேகர் தனியார் ஊடகத்துக்கு பேட்டியளித்து இருக்கிறார். அப்போது அண்ணாமலை பற்றி நெறியாளர் அவரிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த எஸ்.வி.சேகர், "அண்ணாமலையை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அண்ணாமலை கட்சியில் சேருவதற்கு முன் என்னை வந்து வீட்டில் சந்தித்தார். போட்டோகூட இருக்கிறது. இங்குதான் பார்த்தார்.

கட்சித் தலைவராக பதவியேற்றார். அப்போது நான் சென்று அவருக்கு வாழ்த்து சொன்னேன். நீங்களும் மற்றவர்களைபோல் திறமையானவர்களை பயன்படுத்திக்கொள்ள தவறிவிடாதீர்கள். கட்சிக்காக நாங்கள் வேலை செய்ய தயாராக இருக்கிறோம் என்று சொன்னேன். வழக்கம்போலவே அவரும் பேசாமல் விட்டுவிட்டார். அதன் பிறகு ஒரு அப்பாயின்மெண்ட் கொடுத்தால், அதற்குகூட அவரால் மரியாதை கொடுக்க முடியவில்லை.
எனவே எனது மனதில் இருந்தே எடுத்துவிட்டேன். அவரை பற்றி எதுவுமே தெரியாது. பேப்பரில் படித்தால்கூட தாண்டி போய்விடுவேன். ராகுல் காந்தி பாத யாத்திரை போகிறார் என்றால் ஓகே. அவர் பாஜக வெற்றிபெற வேண்டும் என்பதற்காக செல்கிறார். அண்ணாமலை பாத யாத்திரை செல்வது பற்றி அவரிடமே கேளுங்கள். அதில் நான் என்ன சொல்வது.

ஏப்ரல் 14 ஆம் தேதி எப்படியும் உங்களை எல்லாம் சந்திப்பதாக சொல்லி இருக்கிறாரே. அப்போது சொல்வார். 'மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்' என்று எனக்கு சிறிய வயதிலேயே சொல்லிக்கொடுத்து இருக்கிறார்கள். எனவே என்னை மதிக்காத இடத்திற்கு நான் எங்குமே செல்லவே மாட்டேன். நான் அவ்வளவு பெரிய ஆள் எல்லாம் இல்லை. ஒரு கன்னத்தில் அறைந்தால், நான் இன்னொரு கன்னத்தில் அறைந்துவிடுவேன். பளார் என்று.
அதாவது நான் ஒரு சராசரி மனிதன். வார் ரூம் போல் வைத்துக்கொண்டு குட்டி குட்டி நாய்கள் எல்லாம் பொறை போட்டால் குலைத்துக்கொண்டே இருக்கும். அதுபோன்ற ஆட்களை வைத்துகொண்டு வயதில் பெரியவர், திறமையை கொண்டு சாதித்தவர்களை எல்லாம் கிண்டல், கேலி செய்வதை ஒரு பெரிய விசயமாகவே எடுத்துக்கொள்ள மாட்டேன். அதை தூக்கி வீசி விடுவேன்.

என்னைக்கு இருந்தாலும் அவன் எனக்கு இணையாகவே முடியாது. ஏனென்றால் என்னிடம் ஒரு ஓட்டு உள்ளது. அந்த ஓட்டுகூட வெற்றி தோல்வியை தீர்மாணிக்கும். இன்றும் கூட என்னை ஒரு மனிதனாக, நீங்கள் தான் சார் பெரிய ரோல் மாடல் என்று சொல்பவர் தமிழ்நாட்டில் எனக்காக லட்சக்கணக்கானோர் உள்ளனர். அவர்கள் எனது முடிவிற்காக தங்கள் முடிவைகூட மாற்றிக்கொள்வார்கள். அப்படி மாற்றிக்கொண்டால் ஒரு லட்சம் ஓட்டு மாறும்.
அதை காட்டு என்று சொன்னால்.. காட்டலாம்.. தேர்வு வந்தால் காட்டலாம். தேர்வு வருவதற்கு முன்பாகவே நான் 90 மதிப்பெண் தெரியுமா? என்பார்கள். நீ தேர்வு எழுதவே போகவில்லையே. போனால்தானே சொல்ல முடியும். கரையான் கட்டிய புற்றில் கருநாகம் பூர்ந்துவிட்டது என்றால் அவ்வளவுதான். புத்துக்கு டேஞ்சர். நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. பழமொழிதானே அதெல்லாம்.
நான் படங்களை வைத்து இருக்கிறேன். ஆடு வைத்துள்ளேன். நாய் வைத்து உள்ளேன். குரங்கு வைத்து உள்ளேன். நான் சோ வழி வந்தவன். அது தனிமனித தாக்குதல். அந்த ஆடு என்பது எத்தனையோ ஆண்டாக இருக்கிறது. அண்ணாமலையை ஆடு என்று எதிர்க்கட்சிக்காரர்களும் பிடிக்காதவர்களும் சொல்வார்கள். அதே கட்சியில் இருப்பவர்கள் நான் அவருக்காகவே சொல்கிறேன் என்று நினைத்தால் அவர்களும் அதையே நம்புகிறார்கள் என்று அர்த்தம். அசிங்கமாக திட்டுகிறார்கள்." என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications