"கீரை விக்கிற ஆயாவே".. எஸ்வி சேகர் பொசுக்குனு சொன்ன அந்த வார்த்தை.. உச்சக்கட்ட டென்ஷனில் கமலாலயம்..!
சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரை குறித்து, பல்வேறு விமர்சனங்களும், கருத்துக்களும் வெடித்து வரும்நிலையில், பாஜக ஆதரவாளரான எஸ்வி சேகரும் கருத்து கூறியிருக்கிறார்.
"என் மண், என் மக்கள்" என்ற தலைப்பில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை தொடங்கியிருக்கிறார்.. கிட்டத்தட்ட 6 மாதம் இந்த பாதயாத்திரையை மேற்கொள்கிறார்.. இதையொட்டி, நிறைய ஊர்களிலும் பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அமித்ஷா: அண்ணாமலையின் நடைபயணத்துக்காகவே, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கிளம்பி வந்துள்ளதால், பல்வேறு மாநிலங்களின் கவனத்தையும் தமிழகம் ஈர்த்து வருகிறது.
இந்த விழாவில் பங்கேற்க வருமாறு கூட்டணி கட்சித்தலைவர்களுக்கு அண்ணாமலை அழைப்பு விடுத்த நிலையில், எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை என்று அறிவித்திருக்கிறார். ஆனால், அதிமுகவின் சில மூத்த அமைச்சர்கள் பங்கேற்பதாக சொல்கிறார்கள்.
அதேபோல, ஓபிஎஸ், டிடிவி தினகரன் போன்றோர் கலந்து கொள்வார்களா என தெரியவில்லை. அண்ணாமலையின் இந்த பாதயாத்திரையை, திமுக விமர்சித்து வருகிறது.
ராமேஸ்வரம்: அண்ணாமலை நடத்துவது பாத யாத்திரை அல்ல, அது ஒரு பாவ யாத்திரை என்றார் முதல்வர் ஸ்டாலின். "பாவ விமோசனமே அண்ணாமலையின் பாதயாத்திரை.. பாஜக அரசு கடந்த 9 ஆண்டுகளில் செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தம் தேடி பாதயாத்திரை செல்கிறார்கள்" என்று அமைச்சர் சேகர் பாபுவும் விமர்சித்தார். "திமுக பாவயாத்திரை செய்து ராமேஸ்வரத்தில் புனித நீராடி எம்பெருமான் சிவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று இதற்கு அண்ணாமலையும் பதிலடி தந்திருந்தார்.
இப்படியான விமர்சனங்கள் தொடரும் நிலையில், பாஜகவின் முன்னாள் நிர்வாகியும், பிரபல நடிகருமான எஸ்வி சேகர், அண்ணாமலையின் பாத யாத்திரையை கிண்டலடித்துள்ளார் இதுகுறித்து
"கீரை விக்கிற ஆயாவே ஒரு நாளைக்கு 10 கிலோமீட்டர் நடக்கிறாங்க, அண்ணாமலை பின்னாடி நடக்கிற அளவுக்கு நா வெட்டியா இல்லீங்க" என்று எஸ்.வி.சேகர் கிண்டலடித்துள்ளார்.
கிண்டல்: பாத யாத்திரைக்கு நீங்கள் செல்லவில்லை என்று தகவல் வருகிறதே உண்மையா? என்று ட்விட்டர்வாசிகள் எஸ்வி சேகரிடம் கேள்வி எழுப்பி உள்ளனர். இதற்கு பதிலளித்துள்ள எஸ்.வி.சேகர், "கீரை விக்கிற ஆயாவே, ஒரு நாளைக்கு 10 கிலோமீட்டர் நடக்கிறாங்க. அண்ணாமலை பின்னாடி நடக்கிற அளவுக்கு நா வெட்டியா இல்லீங்க. அரசியல் எனக்கு சேவை. வியாபாரம் அல்ல" என்று ட்விட் போட்டுள்ளார்.
ஏற்கனவே, எஸ்வி சேகர் - அண்ணாமலை என இருவருக்குள்ளும் உரசல்கள் வெடித்து கிளம்பியிருக்கும் நிலையில், எஸ்வி சேகரின் இந்த ட்வீட்க்கு அண்ணாமலையின் ஆதரவாளர்கள் பதிலடி தந்து கொண்டிருக்கிறார்கள்.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications