“மிஸ்டர் கிளீன்” ஐபிஎஸ்.. ரோல் மாடல்.. நானும் ரசிகன்! அண்ணாமலையை சேகுவாராவுடன் ஒப்பிட்ட தம்பி ராமையா
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்றைய இளைஞர்களுக்கு முன் மாதிரியாக இருப்பதாகவும், சேகுவாராவை போன்ற போராளி எனவும் நடிகர் தம்பி ராமையா தெரிவித்து இருக்கிறார். ஊடகங்களை அணுகும்போது உள்ளங்கையில் தரவுகளை வைத்து பதற்றம் இன்றி பதில் சொல்லும் அண்ணாமலைக்கு நானும் ஒரு ரசிகன் என்று அவர் கூறி உள்ளார்.
தனியார் யூடியூப் சேனல் நடத்திய விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட நடிகர் தம்பி ராமையாவுக்கு இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி விருது வழங்கினார்.
அப்போது பேசிய தம்பி ராமையா எனக்கு அரசியலில் அதிக ஈடுபாடு உள்ளது. இயக்கத்தில் சேர மாட்டேன். ஆனால், அரசியல் பேசுவேன். எனக்கு உலக அரசியல், தேசிய அரசியல், மாநில அரசியல், மாவட்ட அரசியல் எல்லாம் தெரியும்.

சீமான் பற்றி பேச்சு
அப்போது அவரிடம் அரசியல் தலைவர்களின் படங்கள் திரையில் காட்டப்பட்டு அவர்கள் பற்றி கருத்து கேட்கப்பட்டது. முதலில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து பேசிய அவர், "மேடைப்பேச்சு ஒரு கலை. மேடை பேச்சாளர்கள் இன்று உருவாவதற்கும், அடுத்த தலைமுறையின் நம்பிக்கை நட்சத்திரம் சீமான். இதை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள்." என்றார்.

அன்புமணிக்கு புகழாரம்
பாமக தலைவர் அன்புமணி குறித்து பேசிய அவர், "ஒழுக்கம். அரசியல்வாதியும் அழகாக இருக்கலாம். அரசியல்வாதியும் படித்து முடிந்த டாக்டரான பிறகு மருத்துவ சேவைக்கு செல்ல வேண்டியதில்லை. தகுதிகளை தாறுமாறாக வளர்த்துக்கொண்டு தமிழ்நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்று ஒழுக்க சிந்தனையோடு உலா வரும் அற்புதமான இளம் தலைவர்." என்றார்.

உதயநிதி இளையசூரியன்
அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் புகைப்படம் அடுத்ததாக திரையில் காட்டப்பட்டு நடிகர் தம்பி ராமையாவிடம் அவர் குறித்து கருத்து கேட்கப்பட்டது. அப்போது அவர் பேசுகையில், "இளையசூரியன். தனித்தன்மை. ஒரு இயக்கத்தை உருவாக்குவது, ஒரு வீட்டை கஷ்டப்பட்டு கட்டிவிடலாம்.

உதயநிதி தோளில் சுமை
ஆனால், அந்த வீட்டை பாதுகாப்பது சுமை. ஆக, மிகப்பெரிய கடுமையான சுமை அந்த இளைஞரின் தோளில் ஏற்றப்பட்டு இருக்கிறது. தன் தாத்தாவுடைய பாரம்பரியம், தன் தந்தை உடைய உழைப்பு, மிகப்பெரிய இயக்கத்தின் எதிர்காலம். இந்த மிகப்பெரிய சுமையை சுமந்துகொண்டு சிரித்த முகத்துடன் சிலிர்க்க சிலிர்க்க வரக்கூடிய அற்புதமான இளைஞர்." என்றார்.

அண்ணாமலை சேகுவாரா?
இறுதியாக அண்ணாமலை குறித்து பேசிய அவர், "ஒரு விசயத்துக்காக போராடினோம். ஒரு இடத்தில் முற்றுபெற்றுவிட்டது என்று நின்றுவிட்டால் அவன் போராளி அல்ல. எதை நோக்கி நாம் நகர்ந்தோமோ அது கிடைத்தது. அதை பெருமையாக நினைத்து அந்த இடத்திலேயே கிடந்துவிடாமல், அடுத்தக்கட்டத்துக்கு நகர்ந்து சென்றான் சேகுவாரா.

அண்ணாமலை மிஸ்டர் கிளீன்
அதேபோன்று ஐபிஎஸ் என்பது சாதாரண விசயம் இல்லை. அதை படித்து முடித்து வேறு ஒரு மாநிலத்தில் தன்னுடைய 9 ஆண்டுகாலம் மிஸ்டர் கிளீனாக இருந்து, இன்றைய தினம் ஒரு இயக்கத்துடைய மாநில தலைவர் பொறுப்பை சில மாதங்களிலேயே பெறுவது சாதாரண விசயம் கிடையாது. எவ்வளவு போட்டிகளை தாண்டி இருந்தால் அந்த இடத்துக்கு வந்திருக்க முடியும். பல போட்டிகள்.

அண்ணாமலைக்கு நானும் ரசிகன்
நிறைய நிறைய இளைஞர்களுக்கு இன்றைய ரோல் மாடல். நிறைய சிந்தனைகளை பெற்றுக்கொண்டு, ஊடகங்களை அணுகும்போது உள்ளங்கையில் தரவுகளை வைத்துக்கொண்டு பதற்றம் இன்றி பதில் சொல்கிறார் பார்த்தீர்களா? அவருக்கு நானும் ஒரு ரசிகன்." என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.
-
"வேட்பாளர் இல்லை வெறும் பூத் ஏஜென்ட் தான்".. பாஜகவுக்கு அண்ணாமலை சொன்ன மெசேஜ்.. மேலிடத்துக்கு அடுத்த ஷாக் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
ராதாபுரத்தில் தமிழிசை, மயிலாப்பூரில் அண்ணாமலை? பாஜக எடுக்கும் முடிவு.. கமலாலயத்தில் நடந்தது என்ன? -
நாடியே அடங்கிடுச்சே.. அதிமுக கூட போட்ட டீலா? அண்ணாமலை எங்கே? நயினாரிடம் நறுக்கென்று கேட்ட பியூஸ்! -
மொடக்குறிச்சி, திருப்பூர் தெற்கு செட் ஆகாது.. கோவையில் 1 தொகுதியை ஒதுக்குங்க.. அண்ணாமலை பிடிவாதம்! -
2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியில்லை? மொடக்குறிச்சியை திணிக்கும் பாஜக மேலிடம்? Annamalai அப்செட் -
பியூஸ் கோயல் சொன்ன வார்த்தை.. இறங்கி வந்த அண்ணாமலை.. பாஜக வேட்பாளராக சம்மதம்? என்ன நடந்தது? -
அண்ணாமலை போட்டியிடும் தொகுதி இதுவா? ஈரோட்டில் பாஜக செம ட்விஸ்டு.. மொத்த மொடக்குறிச்சியும் வெயிடிங் -
வானதி vs அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வைத்த செக்.. நடுவில் செந்தில் பாலாஜி வேறு -
Seeman: என்னாது 150 கட்சிகளுடன் விஜய் கூட்டணியா? சீமான் சொன்ன அந்த வார்த்தை! -
150 கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கும் விஜய்! அடித்து சொன்ன சீமான்! இதை கவனிச்சீங்களா! -
ஒரே ஒரு தோட்டா.. காட்டி விடுவேன் டாட்டா.. சமூக விரோதிகளுக்கு சீமான் வார்னிங்












Click it and Unblock the Notifications