‛இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்’.. எடப்பாடியை வாழ்த்திய நடிகர் விஜய்.. முழு அரசியல்வாதியாகவே மாறிட்டாரே
சென்னை: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிலையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது கவனம் பெற்றுள்ளது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுகவின் பொதுச்செயலாளராக செயல்பட்டு வருவதோடு, எதிர்க்கட்சி தலைவராகவும் இருக்கிறார். இந்நிலையில் தான் லோக்சபா தேர்தலில் அதிக இடங்களில் வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் அவர் தீவிர பிரசாரம் செய்தார்.

தமிழகம் முழுவதும் அவர் சுற்றுப்பயணம் செய்து அதிமுக மற்றும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். தற்போது லோக்சபா தேர்தல் முடிவடைந்துவிட்டது. இதையடுத்து அவர் கட்சி சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார்.
இதற்கிடையே தான் இன்று எடப்பாடி பழனிச்சாமிக்கு பிறந்தநாளாகும். அவர் இன்று தனது 70வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார். இதையடுத்து இன்று காலையில் சேலத்தில் உள்ள அவரது வீட்டில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் 70 கிலோ கேக் வெட்டி எடப்பாடி பழனிச்சாமி தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான நடிகர் விஜய், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், ‛‛அஇஅதிமுக பொதுச்செயலாளரும், சட்டபேரவை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்து என தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் சமீபத்தில் தான் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கினார். லோக்சபா தேர்தலை புறக்கணித்த நடிகர் விஜயின் கட்சி வரும் 2026ல் நடக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் களமிறங்குவதாக அறிவித்துள்ளார். இதற்கிடையே அவர் கட்சியை பலப்படுத்தும் பணியிலும், நிர்வாகிகள் நியமனத்திலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
மேலும் அவர் 2026ல் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறாரா? இல்லாவிட்டால் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறாரா? என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக அவ்வப்போது விவாதங்கள் எழுந்து வரும் நிலையில் தான் இன்று நடிகர் விஜய், எடப்பாடி பழனிச்சாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். இது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
நாய்க்கு பிரியாணி.. மக்களை இழிவுபடுத்திப் பேசிய ராகவா லாரன்ஸ்! எழுந்த கண்டனம்.. பறந்த விளக்கம்! -
“தவெகவிடம் ரூ.50 கோடி வாங்கினேனா? தைரியம் இருந்தா ரெய்டு விடுங்க” - மரகதம் குமரவேல் சவால்! -
பரந்தூர் திட்டம் கைவிடப்படுகிறதா? விமான நிலையத் திட்டத்தில் அதிரடி திருப்பம் - விஜய் புதிய வியூகம்! -
திமுக ஆட்சியில் நடந்தது.. இப்போ தொடருது! விஜய்க்கு 6 மாசம் அவகாசம் கொடுங்க! துரை வைகோ ஒரே போடு! -
ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வரவு வைப்பு! 2வது மாதமாக பணத்தை போட்டது தவெக அரசு! -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
செங்கோட்டையன் பாணியில் களமிறங்கிய சிவி சண்முகம்.. திடீரென எடப்பாடிக்கு எதிராக கொந்தளிப்பது ஏன்? -
ரீல்ஸ் போடுங்கப்பா..ஆட்சியை பிடிக்கலாம்! அதிமுக கூட்டத்தில் அள்ளி விட்ட எடப்பாடி! ஆடிப்போன ஐடி விங்! -
எடப்பாடி பழனிசாமிக்கு விழுந்த அரசியல் அடி.. தவெகவுக்கு தாவ ரெடியாகும் முக்கிய புள்ளி! இதுதான் காரணமா -
Moral போலீசா சிங்கப்பெண்கள் படை? முதல் திட்டமே சொதப்பல்! சரமாரியாக எழும் குற்றச்சாட்டுகள்! -
கோவையன்ஸ் ஓட்டு மட்டும் போதுமா? மதுரையை மறந்த விஜய்! கொந்தளிப்பில் ’சவுத்’ மக்கள்! என்னாச்சு?












Click it and Unblock the Notifications