தொண்டர்களுடன் விஜய் செய்த சம்பவம்.. செல்பி வீடியோவை பகிர்ந்த தவெக தலைவர்! ‛கேப்ஷனை' கவனிச்சீங்களா!
சென்னை: மதுரையில் நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு நடந்தது. இந்த மாநாட்டின்‛ரேம்ப் வாக்' செய்த விஜய் ஆர்ப்பரித்த தொண்டர்களுடன் சேர்ந்து ‛செல்பி' வீடியோ எடுத்தார். இந்த வீடியோவை விஜய் தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அவரது ‛கேப்ஷன்' கவனம் பெற்றுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு நேற்று மதுரையில் நடந்தது. இந்த மாநாட்டில் தொண்டர்கள் கூட்டத்துக்கு நடுவே நடிகரும், தவெக தலைவருமான விஜய் ‛ரேம்ப் வாக்' செய்து மேடைக்கு வந்தார்.

இந்த சமயத்தில் தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர். விஜய் மீது கட்சி துண்டை தூக்கி வீசினர். சில தொண்டர்கள் இரும்பு தடுப்பு கம்பி வழியாக‛ ரேம்ப் வாக்' மேடை மீது ஏறி அலப்பறை செய்தனர்.
அப்போது தொண்டர்களுடன் விஜய் ‛செல்பி' வீடியோ எடுத்தார். இந்த வீடியோவை விஜய் இன்று தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் விஜய் தனது தலையில் கட்சி கொடியை கட்டி உள்ளார். தோளிலும் கட்சி கொடியை அணிவித்தபடி தொண்டர்களுடன் சிரித்தபடி செல்பி வீடியோ எடுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
இந்த வீடியோவின் பதிவில் விஜய் ‛கேப்ஷன்' எழுதி உள்ளார். அதில், ‛‛உங்கள் விஜய் உங்கள் விஜய் உயிரென வர்றேன் நான்.. உங்க விஜய் உங்க விஜய் எளியவன் குரல் நான்.. உங்க விஜய் உங்க விஜய் தனி ஆள் இல்ல கடல் நான்..'' என குறிப்பிட்டுள்ளார்.
கேப்ஷனில் இடம்பெற்ற இந்த வரிகள் நேற்று வெளியிடப்பட்ட விஜயின் கட்சி பாடலாகும். இந்த புதிய பாடல், ‛‛மக்களின் மன்னனே.. அன்பான அண்ணனே.. வீழா வீரனே.. பெரியாரின் பேரனே.. மன்னா.. மன்னா.. எங்கள் உரிமையின் காவலன்'' என தொடங்கும். இந்த பாடலின் நடுப்பகுதியில் நடிகர் விஜய் பாடியிருப்பார்.
நடிகர் விஜய், ‛‛உங்கள் விஜய் உங்கள் விஜய் உயிரென வர்றேன் நான்.. உங்க விஜய் உங்க விஜய் எளியவன் குரல் நான்.. உங்க விஜய் உங்க விஜய் தனி ஆள் இல்ல கடல் நான்..''' என்ற வரியை பாடியிருப்பார். இந்த வரியை தான் நடிகர் விஜய் இந்த வீடியோவில் கேப்ஷனாக போட்டுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications