தாங்க முடியலையே! மனோபாலா இறந்த செய்தியை கேட்டதும்.. உடைந்து போய் அழுத வடிவேலு.. என்ன சொன்னார்?
சென்னை: நடிகர் வடிவேலு, மனோபாலாவின் மரண செய்தியை கேட்டு உடைந்து போய் உள்ளார்.
தயாரிப்பாளரும், பிரபல நடிகரும், இயக்குநருமான மனோபாலா (69) உடல்நலக்குறைவால் காலமானார்.இல்லத்தில் இன்று ஓய்வு எடுத்துக்கொண்டு மனோபாலா திடீரென மரணம் அடைந்தார். அவர் கடந்த சில நாட்களாக கடுமையான உடல்நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டு இருந்தார்.

கல்லீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை மரணம் அடைந்தார். தமிழ் சினிமா உலகை அவரின் மரணம் உடைத்து போட்டு உள்ளது. எல்லோருடனும் அன்புடனும், நட்புடனும் இருப்பவர் நடிகர் மனோபாலா. சினிமா உலகில் மிகவும் நல்ல பெயர் கொண்டவர் இவர்.
அப்படிப்பட்ட மனோபாலாவின் மரணம் சினிமா உலகில் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
தமிழ் சினிமா உலகை அவரின் மரணம் உடைத்து போட்டு உள்ளது. எல்லோருடனும் அன்புடனும், நட்புடனும் இருப்பவர் நடிகர் மனோபாலா. சினிமா உலகில் மிகவும் நல்ல பெயர் கொண்டவர் இவர்.
இந்த நிலையில் நடிகர் வடிவேலு, மனோபாலாவின் மரண செய்தியை கேட்டு உடைந்து போய் உள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து பல படங்களில் நடித்து உள்ளனர்.
இந்த நிலையில் மனோபாலாவின் மரணம் குறித்து நடிகர் வடிவேல் நியூஸ் 7 ஊடகத்திற்கு கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார். அதில், நடிகர் மனோபாலாவின் மரணம் எனக்கு பெரிய அளவில் அதிர்ச்சியளிக்கிறது. மனோபாலா எல்லோரிடமும் மிகவும் அன்பாக நடக்க கூடியவர்.
மனோபாலாவின் மரணம் எனக்கு சொல்ல முடியாத, தாங்க முடியாத மிகப்பெரிய வேதனையை கொடுத்துள்ளது என்று நடிகர் வடிவேலு கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்.
சினிமா பின்னணி

நடிகர் மனோபாலா தமிழ் திரையுலகில் பல முகங்களை கொண்ட நடிகர். இவர் தயாரிப்பாளராக, இயக்குனராக, காமெடி நடிகராக, குணச்சித்திர நடிகராக பல வேடங்களில் நடித்துள்ளார்.
இவர் இதுவரை 40 படங்களை இயக்கி உள்ளார். 16 தொலைக்காட்சி தொடர்களை இயக்கி இருக்கிறார்.
200க்கும் மேற்பட்ட படங்களில் பல்வேறு வேடங்களில் நடித்து இருக்கிறார். 69 வயதாகும் இவர் சதுரங்க வேட்டை உள்ளிட்ட பல்வேறு படங்களை தயாரித்து உள்ளார்.
1994ல் தாய்மாமன் என்ற படத்தில் தாய் மாமன் என்ற படத்தில் இவர் அறிமுகம் ஆனார்.
இரங்கல்
கடந்த ஜனவரி மாதம் மனோபாலாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. கல்லீரல் பிரச்சினை காரணமாக ஆயிரம்விளக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
என் மாணவன் மனோபாலா மறைவு எனக்கும் எங்கள் தமிழ் திரை உலகிற்கும் ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும், என்று இயக்குனர் பாரதி ராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் இது தொடர்பாக வெளியிட்டுள்ள இரங்கலில், பிரபல இயக்குநரும், நடிகருமான, அருமை நண்பர் மனோபாலாவுடைய இறப்பு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தியடையட்டும், என்று குறிப்பிட்டு உள்ளார்.
காரணம்
இல்லத்தில் இன்று ஓய்வு எடுத்துக்கொண்டு மனோபாலா திடீரென மரணம் அடைந்தார். அவர் கடந்த சில நாட்களாக கடுமையான உடல்நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டு இருந்தார்.
அவருக்கு ஏற்கனவே கல்லீரல் பிரச்சனை இருந்தது. இந்த கல்லீரல் பிரச்சனை காரணமாக அவர் சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கே சிகிச்சை முடித்த அவரை வீட்டில் ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் கூறி உள்ளனர்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications