இளையராஜாவுக்கு இவ்வளவு திமிரா, ஹெட்வெயிட் ஜாஸ்தியா? GBU நோட்டீஸுக்கு விளாசிய நடிகர் வேணு அரவிந்த்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இளையராஜாவுக்கு இருப்பது திமிரா, ஹெட்வெயிட்டா என கேள்வி எழுப்பிய நடிகர் வேணு அரவிந்த், அது குறித்து விளக்கத்தையும் அளித்துள்ளார். தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் அதை அவர் காட்டமாகவே பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து வேணு அரவிந்த் அளித்த பேட்டியில் இளையராஜா சாருக்கு இவ்வளவு ஈகோ இருக்கக் கூடாது, இவ்வளவு ஹெட்வெயிட் இருக்கக் கூடாது என்கிறார்கள். ஆனால் இத்தனை அற்புதங்களை செய்த அவருக்கு இதெல்லாம் இருப்பது தப்பு ஒன்றும் இல்லையே!

ilayaraja good bad ugly

ஜென்சி ராஜா சாரை ஒரு வைப்பாகவே நினைக்கிறார்கள். ஆனால் ராஜா சார் கம்போசர் என்பதை தாண்டி அவர் எல்லாருடைய மனதிலும் டென்ட் கட்டி உட்கார்ந்து இருக்கிறார். இவர் கிட்ட ஈகோ, ஹெட்வெயிட் எல்லாத்தையும் பார்க்கும் நீங்கள், அவருடைய செல்ப் கான்ஃபிடன்ஸை பாருங்க (தன்னம்பிக்கை).

81 வயதில் உழைக்கிறார்

81 வயதிலும் உழைக்கணும், இந்த காலத்துல கம்ப்யூட்டர் ஜெனரேட்டர் மியூசிக் இருக்கு ஆனால் நான் ஆர்கெஸ்ட்ரா வச்சுதான் கம்போஸ் செய்வேனு சொல்வார். அப்பதான் சவுண்ட் குவாலிட்டி நேச்சுரலாக இருக்கும். பல கலைஞர்கள் வாழ்வார்கள் என்ற சிந்தனை. பிடித்ததை செய்ய வேண்டும் என்கிற எண்ணம் அவரை பற்றி யார் என்ன சொன்னாலும் ராஜா ராஜாதான். இவ்வாறு வேணு அரவிந்த் தெரிவித்துள்ளார்.

குட் பேட் அக்லி

அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல்களான இளமை இதோ இதோ, ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்சக்குருவி உள்ளிட்ட பாடல்கள் இடம்பெற்றிருந்தன. இவை உருமாற்றம் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டது.

இளையராஜா நோட்டீஸ்

இந்த நிலையில் இந்த பாடல்களை தனது அனுமதியே இல்லாமல் படக் குழு பயன்படுத்தியிருந்ததாக இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் இந்த பாடல்களை எல்லாம் படத்திலிருந்து நீக்க வேண்டும். என் அனுமதியில்லாமல் பயன்படுத்தியதற்கு ரூ 5 லட்சம் நஷ்ட ஈடு அளிக்க வேண்டும்.

மன்னிப்பு கேட்க கோரிக்கை

மேலும் 7 நாளில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என இளையராஜா நோட்டீஸில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இதுகுறித்து படத் தயாரிப்பாளர் ரவிசங்கர் கூறுகையில், குட் பேட் அக்லி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸின் உரிமையாளர் ரவிசங்கர் பதில் கொடுத்துள்ளார்.

அனுமதி பெற்றோம்

அதில் அவர் கூறுகையில், குட் பேட் அக்லி படத்தில் இளையராஜா பாடல்களைப் பயன்படுத்துவதில் எந்தத் தவறும் செய்யவில்லை. விதிகளின்படி அனுமதி பெற்றுள்ளோம். இந்த படத்தில் பயன்படுத்தப்பட்ட பாடல்களை தேவையான அனைத்து அனுமதிகளையும் பெற்றுள்ளோம்.

விதிகளை பின்பற்றினோம்

அந்த உரிமைகள் அனைத்தும் இசை லேபிள்களுக்கே உரியது. அவர்களிடம் தடையில்லா சான்றையும் பெற்றுள்ளோம். எனவே நாங்கள் விதிகளின்படிதான் செயல்பட்டுள்ளோம். இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் இளையராஜாவிடம் இருந்து எங்களுக்கு எந்த நோட்டீஸும் இதுவரை வரவில்லை. அவர் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உள்ளது. நோட்டீஸ் கிடைத்ததும் எங்கள் சட்டக் குழு அதை சந்திக்கும் என தெரிவித்துள்ளார்.

கூலி டீசர்

இந்த நிலையில் இளையராஜா ஏற்கெனவே மஞ்சுமெல் பாய்ஸ், கூலி உள்ளிட்ட படங்களில் தனது பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக நோட்டீஸ் அனுப்பியிருந்தார். எப்போதெல்லாம் இளையராஜா இந்த நோட்டீஸ் அனுப்புகிறாரோ அப்போதெல்லாம் அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழத்தான் செய்கின்றன.

என்ன நியாயம்

அதாவது, " இளையராஜா தான் இசையமைத்துக் கொடுத்த பாடலுக்கு அந்தந்த படத் தயாரிப்பாளர்களிடம் இருந்து பணத்தை பெற்றுக் கொண்டார். அப்படியிருக்கும் போது மீண்டும் மீண்டும் அந்த இசைக்கு உரிமை கொண்டாடுவது எந்த வகையில் நியாயம்?

கடும் விமர்சனங்கள்

படத்திற்கு ஊதியத்தையும் பெற்றுக் கொண்டு நோட்டீஸ் அனுப்பி அதன் மூலம் ராயல்டி கேட்கிறார். அவருக்கு பணத்தின் மீது ஈர்ப்பு அதிகம். தான் என்ற அகங்காரம் என்றெல்லாம் கடுமையான விமர்சனங்கள் எழுகின்றன.

இளையராஜா செய்வது சரிதான்

ஆனால் அவரிடம் ஏற்கெனவே அனுமதி பெற்று அவரது பாடலை பயன்படுத்திய இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும், "இளையராஜா செய்வது சரிதான், நாங்கள் அவரிடம் பாடலை பயன்படுத்த அணுகிய போது காசெல்லாம் வேண்டாம். பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றார். அவர் எதிர்பார்ப்பது அனுமதி கேட்டு பயன்படுத்த வேண்டும் என்பதைதானே தவிர பணத்தை அல்ல. இது போன்ற அவருடைய சட்ட போராட்டம் வருங்கால இசையமைப்பாளர்களுக்கும் பெற்றுத் தரும் உரிமை" என ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில்தான் வேணு அரவிந்த் இவ்வாறு பேசியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+