‛‛பேசமாட்டேனு சொன்னாலும் நான் பேசுவேன்’’.. திடீரென மனம்மாறிய நடிகர் விஜய்.. இன்றும் சம்பவம் இருக்கு
சென்னை: இரண்டாம் கட்டமாக தாவெக சார்பில் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் மாணவர்கள் மத்தியில் உரையாற்ற மாட்டேன் என விஜய் கூறியிருந்தார். ஆனால் தற்போது உரையாற்றுவதாக கூறியிருக்கிறார்.
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்கள் பெற்று தேர்ச்சியடைந்த மாணவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துகளையும், உதவிகளையும் நடிகர் விஜய் வழங்கி வருகிறார். கடந்த 2023ம் ஆண்டு இதேபோல மாணவர்களை அவர் சந்தித்திருந்தது பேசுபொருளாகியிருந்தது. இதனை தொடர்ந்து அவர், 'தமிழக வெற்றிக் கழகம்' எனும் அரசியல் கட்சியையும் தொடங்கியிருந்தார்.

இந்நிலையில் இரண்டாவது ஆண்டாக இந்த முறையும் மாணவர்களை விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகிறார். கடந்த முறையை போல அல்லாமல் இந்த முறை, இரண்டு வெவ்வேறு நாட்களாக மாணவர்களை விஜய் சந்திக்கிறார். அந்த வகையில் முதல் சந்திப்பு கடந்த 28ம் சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது.
இதில் அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இரண்டாவது கட்ட விருது வழங்கும் விழா இன்று நடைபெறுகிறது. சென்னை திருவான்மியூரில் தனியார் மண்டபத்தில் நடைபெறும் இந்த விழாவில் செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் என 19 மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர். இவர்களுக்கு வாழ்த்துகளையும், பரிசு பொருட்கள் மற்றும் உதவி தொகையையும் விஜய் வழங்குகிறார்.
740 மாணவர்கள், அவர்களுடைய பெற்றோர்கள் என மொத்தமாக 3500க்கும் அதிகமானோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். கடந்த முறை அதிகாலை 6 மணிக்கே விஜய் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்துவிட்டார். இந்நிலைவயில், இன்றும் 7 மணியளவில் மண்டபத்திற்கு வந்திருக்கிறார்.
அரசியல் கட்சியின் தலைவராக மாணவர்களை முதல் முறையாக கடந்த 28ம் தேதி சந்தித்த விஜய், மாணவர்கள் மத்தியில் உரையாற்றியிருந்தார். இந்த உரை தமிழக அரசியல் தளத்தில் விவாதங்களை ஏற்படுத்தியது. அதேநேரம், இரண்டாவது விழாவில் உரையாற்ற போவதில்லை என்று விஜய் கூறியிருந்தார். ஆனால், தற்போது திடீர் ட்விஸ்ட்டாக, மாணவர்கள் மத்தியில் உரையாற்ற போவதாக அறிவித்திருக்கிறார்.
சமீப நாட்களாக அவருடைய நடவடிக்கை தமிழக அரசுக்கு ஆதரவானது போன்று இல்லை. அதே நேரம், வெளிப்படையாகவும் மத்திய அரசை எதிர்க்கவில்லை. இப்படி இருக்கையில் இன்று மாணவர்கள் மத்தியில் அவர் என்ன பேசுவார் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
-
தூத்துக்குடிக்கு வர இருந்த கப்பல் முதலீடு! கண்டுக்காத தமிழக அரசால்..ஆந்திரா போன மசகான் டாக் நிறுவனம் -
சிக்கும் செந்தில் பாலாஜி? முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு.. தோண்டப்படும் டாஸ்மாக் முறைகேடு! -
சென்னை ஆன்லைன் கட்டிட அனுமதியில் அதிரடி மாற்றம்.. ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு பறந்த மெசேஜ்! -
செந்தில் பாலாஜி.. கே.என் நேரு.. அடுத்து அவர்தான்.. செஸ் போர்டில் அடுத்தடுத்து காய் நகர்த்தும் விஜய்! -
கிடைக்கிற கேப்பில் எல்லாம்.. அடிச்சு தூக்கிய விஜய்.. வடக்கின் அஸ்திவாரத்தையே ஆட்ட போகும் பிளான் -
”ஆபரேசன் அக்னி கலசம்” வன்னியர் ஓட்டுகளை அள்ளுவது எப்படி? விஜய் அமைத்த வியூகம்! பரபரப்பான ’நார்த்’ -
விஜய் அரசுக்கு முதல் அக்னிப்பரீட்சை.. நெருப்பிற்குள் நுழையும் மோதல்.. 5 தொகுதிகளில் என்ன நடக்கும்? -
பெண்களின் பாதுகாப்பிற்கு புதிய அரண்.. ஜூன் 9ல் சிங்கப்பெண் அதிரடி படையை களமிறக்கும் முதல்வர் விஜய்! -
இந்தியா கூட்டணியில் மிஸ்ஸான விஜய் கட்சி.. காங்கிரஸ் ஒன்னு சொல்ல.. திருமா வேற சொல்ல..! பெரிய குழப்பம் -
மகாராஷ்டிராவை பாருங்க.. தமிழ்நாட்டிலும் இதேமாதிரி செய்யனும்! விஜய்க்கு ஐடியா கொடுத்த அன்புமணி ராமதாஸ் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ!












Click it and Unblock the Notifications