மக்களுக்கான உதவிகளை தொடர்ந்து செய்யுங்கள்.. கூடவே ரசிகர்களுக்கு "பூஸ்ட்" கொடுத்து அனுப்பிய விஜய்

சென்னை அருகே பனையூரில் உள்ள தனது வீட்டில் நடிகர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்கள் பணிகளை தொடர்ந்து செய்யுங்கள் என தனது இயக்க நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். அத்துடன் உறுப்பினர் சேர்க்கையில் கவனம் கொள்ளுங்கள் என விஜய் அறிவுறுத்தியிருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி வடக்கு- மேற்கு, மதுரை வடக்கு- மேற்கு, கன்னியாகுமரி, திருப்பத்தூர் உள்பட புதிதாக இணைந்த மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் சென்னை பனையூரில் இருக்கும் அலுவலகத்தில் நடிகர் விஜய் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் மக்கள் பணிகளை தொடர்ந்து செய்யுங்கள்.

கடன் வாங்காமல் உதவிகளை செய்யுங்கள். வழக்கம் போல் தேவையான உதவிகள் என்னிடம் இருந்து வரும்.செய்யும் தொழிலில் கவனம் செலுத்தி பெற்றோரை நல்லபடியாக கவனித்து கொள்ளுங்கள்.

உறுப்பினர் சேர்க்கை

உறுப்பினர் சேர்க்கை

மக்கள் இயக்க செயல்பாடுகள், உறுப்பினர்கள் சேர்க்கை குறித்தும் அவர் ஆலோசனை நடத்தியுள்ளார்.உறுப்பினர் சேர்க்கை குறித்து விஜய் பேசியுள்ளதை பார்க்கையில் அவர் நிச்சயம் அரசியலுக்கு வரும் எண்ணத்துடன் இருப்பதாகவே தெரிகிறது.

விஜய்

விஜய்

விஜய்யின் இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளார்கள். அடிமட்ட அளவில் இறங்கி வார்டு முதல் அனைத்து தரப்பிலும் உறுப்பினர்களை சேர்க்க விஜய் அறிவுறுத்தியுள்ளதால் ரசிகர்களுக்கு அது மேலும் ஊக்குவிப்பை கொடுத்துள்ளது.

கருத்து

கருத்து

விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் பாஜகவில் இணைய போகிறார் என்ற தகவலை மறுத்து கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பாஜகவில் இணைய போகிறோமா அந்த கருத்துக்கே இடமில்லை.

அரசியல் கட்சி

அரசியல் கட்சி

எனக்கென்று ஒரு அமைப்பு உள்ளது. அதை வலுப்படுத்தும் வேலையில் ஈடுபட்டிருக்கிறேன். விஜய் மக்கள் இயக்கம் தேவைப்படும் போது அரசியல் கட்சியாக மாறும். நடிகர்களின் சுதந்திரத்தை யாராலும் தடுக்க முடியாது என்றார். விஜய் அரசியலுக்கு வருவார் என்பது குறித்து எஸ்ஏசி சூசகமாக கூறிய நிலையில் இயக்கத்தை வலுப்படுத்த ஆள் சேர்ப்பில் தீவிரம் காட்டுமாறு விஜய் கூறியது ரசிகர்களுக்கு தெம்பளிக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+