‛ரொம்ப முக்கியமான விங்க்’.. தமிழக வெற்றிக் கழகத்துக்கு 5 முக்கிய நிர்வாகிகளை நியமித்த விஜய்! அதிரடி
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை அணிக்கு மாநில செயலாளர், மாநில இணை செயலாளர் உள்பட 5 முக்கிய பொறுப்புகளுக்கு நிர்வாகிகளை நடிகரும், அந்த கட்சியின் தலைவருமான விஜய் நியமனம் செய்துள்ளார்.
நடிகர் விஜய் அரசியலுக்குள் நுழைந்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அவர் கட்சியை தொடங்கி உள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ள விஜய் 2016ம் ஆண்டில் தமிழக சட்டசபை தேர்தலில் களமிறங்க போவதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் தான் தற்போது மாநிலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தை பலப்படுத்துவது, புதிய உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் நடிகர் விஜய் தனது கட்சிக்கு 5 முக்கிய நிர்வாகிகளை நியமனம் செய்துள்ளார். அதாவது கட்சிக்கு முக்கியமான பிரிவான உறுப்பினர் சேர்க்கை பிரிவுக்கு 5 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு கட்சியிலும் ஆண்டுதோறும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். புதிய உறுப்பினர்களை கட்சியில் இணைப்பதன் மூலம் தான் அந்த கட்சி தொடர்ந்து வளர முடியும். இத்தகைய பணியை மேற்கொள்ளும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர் சேர்க்கை பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவின் மாநில அளவிலான முதல் 2 முக்கிய பொறுப்புகளில் பெண்களை நியமனம் செய்து நடிகர் விஜய் அசத்துள்ளார். இதுதொடர்பாக நடிகர் விஜய் கையெழுத்துடன் தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழக வெற்றிக் கழகத்தின் அடிப்படை கட்டமைப்புகளை வலுப்படுத்தி வருகின்றோம். இரண்டு கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளோம். இதன் முதற்கட்டமாக, உறுப்பினர் சேர்க்கை அணியை உருவாக்கி உள்ளோம். மகளிர் தலைமையில் முதன் முதலாக உருவாக்கப்பட்டுள்ள இந்த அணியினர், கழக தோழர்களோடு இணைந்து மக்களுக்கு உதவி செய்வார்கள்.
அதன்படி உறுப்பினர் சேர்க்கை அணியின் மாநில செயலாளர் பொறுப்புக்கு விஜயலட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் நாமக்கல் மாவட்டம் குமாரசபாளையம் ஜெகேகே சுந்தரம் நகரை சேர்ந்தவர். அதேபோல் மாநில இணை செயலாளர் பொறுப்புக்கு எஸ்என் யாஸ்மின் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தாலகா, வடக்குத்து ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர்.
இந்த அணியின் மாநில பொருளாளராக வி சம்பத் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர். கோவை கணேஷ் லே-அவுட்டை சேர்ந்தவர். மேலும் மாநில துணை செயலாளராக மதுரை கருப்பாயூரணி தாலுகா ஓடைப்பட்டியை சேர்ந்த ஏ விஜய் அன்பன் கல்லணை தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த அணியின் மாநில துணை செயலாளர் பொறுப்புக்கு எம்எல் பிரபு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகரை சேர்ந்தவர்
மேலும் புதிய அணி, கழக உள்கட்டமைப்ப சார்ந்து விரைவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாகவும், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர் சேர்க்கை அணி நிர்வாகிகளுக்கம் கழக தோறர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு விஜய் அந்த அறிக்கையில் கேட்டுள்ளார்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications