விஜய் முகம் முழுக்க சோகம்.. நடிகர் கவுண்டமணி மனைவிக்கு நேரில் அஞ்சலி செலுத்திய தவெக தலைவர்
சென்னை: நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவரது உடல் சென்னையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் இரவில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான நடிகர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதோடு, கவுண்டமணிக்கு ஆறுதல் கூறினார்.
தமிழ் சினிமாவில் மூத்த காமெடி நடிகராக இருப்பவர் கவுண்டமணி. இவருக்கு வயது 85 ஆகிறது. 90ஸ் காலத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தார். தற்போது வயது முதிர்வு காரணமாக அவர் படங்கள் நடிப்பதில் இருந்து விலகி உள்ளார்.

இருப்பினும் கவுண்டமணி நடித்த காமெடி சீன்கள் இன்று வரை ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறது. தற்போது நடிகர் கவுண்டமணி தனது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் தான் கவுண்டமணியின் மனைவி சாந்தி இன்று திடீரென்று காலமானார். அவருக்கு வயது 67. உடல்நலக்குறைவு காரணமாக சாந்தியின் உயிர் இன்று பிரிந்தது. சமீபகாலமாக அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று காலமானார். நடிகர் கவுண்டமணி, சாந்தியை காதலித்து திருமணம் செய்தார். கவுண்டமணி - சாந்தி தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர்.
சாந்தியின் உடல் நடிகர் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள கவுண்டமணி இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரைப்பட நடிகர், நடிகைகள் சாந்தியின் மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருவதோடு, கவுண்டமணிக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். இந்நிலையில் தான் இன்று இரவு நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான நடிகர் விஜய், கவுண்டமணியின் வீட்டுக்கு நேரில் சென்றார்.
வீட்டில் இருந்த கவுண்டமணியை சந்தித்து கட்டியணைத்து ஆறுதல் கூறினார். மனைவி சாந்தியின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். அதன்பிறகு சாந்தியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தியின் இறுதி சடங்குகள் நாளை காலையில் நடைபெற உள்ளது.
-
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய்












Click it and Unblock the Notifications