அன்புமணிக்கு போன் போட்டு பேசிய விஜய்! வாழ்த்துடன் 5 நிமிடம் முக்கிய உரையாடல்! காரணம் இதுதான்
சென்னை: நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் திடீரென்று இன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து கூறினார். இவர்கள் 2 பேரும் சுமார் 5 நிமிடங்கள் வரை தொலைபேசியில் பேசி கொண்டதாக கூறப்படும் நிலையில் தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.
நடிகராக இருந்து அரசியலுக்குள் அடியெடுத்து வைத்துள்ளார் விஜய்.தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கி உள்ளார். இந்த மாதம் 27 ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிராவாண்டி வி.சாலையில் விஜயின் முதல் அரசியல் மாநாடு என்பது நடைபெற உள்ளது.

இதற்கு போலீசார் அனுமதி வழங்கிய நிலையில் மாநாட்டுக்கான ஏற்பாடுகளை கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மேற்கொண்டு வருகிறார். இந்த அரசியல் மாநாட்டில் நடிகர் விஜய் தனது கட்சி கொள்கை மற்றும் விவாதமான கட்சி கொடிக்கான அர்த்தத்தை நடிகர் விஜய் விளக்கி கூற உள்ளார்.
இதனால் வரும் 27 ம் தேதி விக்கிரவாண்டியில் நடக்கும் விஜயின் முதல் அரசியல் மாநாடு என்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இத்தகைய சூழலில் தான் நடிகர் விஜய் இன்று திடீரென்று பாமக மாநில தலைவர் அன்புமணி ராமதாசுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது அன்புமணி ராமதாஸ்க்கு இன்று பிறந்தநாளாகும். அவரது பிறந்தநாளையொட்டி அரசியல் கட்சி பிரமுகர்கள் அன்புமணி ராமதாஸை தொடர்பு கொண்டும், வலைதளங்களிலும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய், இன்று அன்புமணி ராமதாஸை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதன்பிறகு இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துள்ளனர்.
இந்த தொலைபேசி உரையாடல் என்பது சுமார் 5 நிமிடங்கள் வரை நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த உரையாடலின்போது அன்புமணி ராமதாஸ், நடிகர் விஜயின் அரசியல் மாநாட்டுக்கு வாழ்த்துகள் தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது. இது தற்போது பேசும் பொருளாகி உள்ளது. அதாவது பாமக தற்போது பாஜக கூட்டணியில் உள்ளது. ஆனால் நடிகர் விஜய் இப்போது தான் அரசியலுக்குள் நுழைந்துள்ளார். அவர் மத்திய பாஜக அரசு கொண்டு வந்த நீட் தேர்வை எதிர்த்துள்ளார். இதன்மூலம் விஜய் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.
மேலும் 2026ம் ஆண்டின் தமிழக சட்டசபை தேர்தலில் தான் தமிழக வெற்றிக் கழகம் அரசியலை தொடங்கும் என்று அறிவித்துள்ளார். ஆனால் கூட்டணியா? இல்லை 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியா? என்பதை அவர் இன்று வரை அறிவிக்கவில்லை. மேலும் நடிகர் விஜயின் செயல்பாட்டை பொறுத்தவரை அவர் பாஜக மற்றும் திமுகவுடன் கூட்டணி செல்ல வாய்ப்பில்லை என்பது உறுதியாகி உள்ளது. இதனால் நடிகர் விஜய் தனித்து போட்டியிடலாம். இல்லாவிட்டால் பிற கட்சிகளுடன் இருக்கும் சில கட்சிகளை தன்பக்கம் இழுத்து விஜய் புதிய கூட்டணி அமைத்து களமிறங்கலாம் என்று சொல்லப்படுகிறது.
இத்தகைய சூழலில் தான் நடிகர் விஜய், அன்புமணி ராமதாஸ்க்கு தொலைபேசியில் பிறந்தநாள் வாழ்த்து கூறியிருப்பது கவனம் பெற்றுள்ளது. அதேவேளையில் இன்னொரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நடிகர் விஜய் அன்புமணி ராமதாஸ்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவது இது முதல்முறையல்ல. கடந்த ஆண்டும் நடிகர் விஜய், அன்புமணி ராமதாஸை தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
ஆதவ் அர்ஜுனா பதவிக்கு சிக்கல்? அதிமுக எம்.பி இன்பதுரை வைத்த லீகல் பாயிண்ட்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications