உங்களை ‘அங்க’ வச்சு அழகு பார்க்கணும்! நிர்வாகிகளை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய தவெக தலைவர் விஜயின் பேச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நேற்று நடைபெற்றது. அப்போது நான்காம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியலையும் விஜய் வெளியிட்டார். அப்போது நிர்வாகிகள் இடையே விஜய் பேசிய பேச்சு நிர்வாகிகளை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியதாக கூறுகின்றனர் அந்த கட்சியினர்.

தமிழ் திரையுலகின் நம்பர் ஒன் நடிகராக இருந்து தற்போது அரசியல்வாதி அவதாரம் எடுத்திருக்கிறார் விஜய். கட்சியின் பெயரை அறிவித்தது தொடங்கி உறுப்பினர் சேர்க்கை, ஆலோசனை, மாநில மாநாடு, புத்தக வெளியீட்டு விழா, நிர்வாகிகளுடன் சந்திப்பு என மிகவும் பிசியாகவே இருக்கிறார்.

vijay tvk

இது ஒருபுறம் இருக்க கட்சியில் மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் பல கட்டங்களாக அறிவிக்கப்பட இருக்கிறது. இதுவரை 2 பட்டியல் வெளியாகி இருக்கும் நிலையில், ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு கட்சியில் பதவி அளிக்கப்பட இருக்கிறது.

தமிழகத்தில் அமைப்பு ரீதியாக நூற்றுக்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்ய விஜய் திட்டமிட்டு இருக்கிறார். தமிழகத்தில் 234 தொகுதிகள் இருக்கும் நிலையில் இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற அடிப்படையில் மாவட்ட செயலாளர் நியமனம் நடைபெற இருக்கிறது. மேலும் மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர், மாவட்டத் துணைச் செயலாளர் என தனது ரசிகர் மன்றத்தில் இருந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது.

மேலும் துணைத் தலைவர், துணைச் செயலாளர் பதவிகளில் பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் அதிகளவு வாய்ப்பு தர திட்டமிடப்பட்டிருக்கிறது. அது மட்டும் அல்லாமல் 28 சார்பு அணிகளும் விஜய் கட்சியில் உருவாக்கப்பட இருக்கிறது. மகளிர் அணி, தொண்டரணி, இளைஞர் அணி, மருத்துவர் அணி, பொறியாளர் அணி, இலக்கிய அணி உள்ளிட்ட 28 அணிகளுக்கும் தலைவர், செயலாளர், அமைப்பாளர்கள் உள்ளிட்ட பொறுப்புகள் வழங்கப்பட இருக்கிறது.

தற்போது கட்சியின் அடிப்படையான மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற அடிப்படையில் மூன்று கட்டங்களாக 56 மாவட்ட பொறுப்பாளர்கள் குறித்த நியமன அறிவிப்பை விஜய் வெளியிட்டார். நேற்று சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நான்காம் கட்ட பொறுப்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது.

தொடர்ந்து 19 மாவட்டங்களுக்கான மாவட்ட செயலாளர்கள், பொருளாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் பட்டியலை விஜய் வெளியிட்டார். குறிப்பாக நேற்று தமிழக வெற்றி கழகம் தொடங்கி முதலாம் ஆண்டு நிறைவடைந்து இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்ற நிலையில் கட்சி கொடி ஏற்றிய அவர், கொள்கைத் தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் விஜய்.

அப்போது நிர்வாகிகளிடம் உரையாற்றிய அவர்," தமிழக மக்கள் எனக்கு நிறைய செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு திருப்பி செய்ய வேண்டும் என்பதற்காகவே அரசியலுக்கு வந்திருக்கிறேன். சினிமாவில் வந்ததிலிருந்து தற்போது அரசியலில் களமிறங்கி இருப்பது வரை எனது ரசிகர்களாகிய நீங்கள் தான் எனக்கு உறுதுணையாக இருந்திருக்கிறீர்கள். தமிழக மக்கள் என்னை எங்கு அமர வைத்து அழகு பார்த்திருக்கிறார்களோ. அதே இடத்தில் நான் எங்கு இருக்கிறேனோ அங்கே உங்களை அமர வைத்து அழகு பார்ப்பதுதான் எனது லட்சியம். 2026 சட்டமன்ற தேர்தலில் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம். அப்போது நான் இருக்கும் இடத்தில் நீங்களும் இருப்பீர்கள்" எனக் கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+