நித்திரையில் இருக்கும் தமிழா சித்திரை இல்லை புத்தாண்டு.. விஜய்யின் பொங்கல் வாழ்த்தைக் கவனிச்சீங்களா?
சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். நீண்ட காலமாகவே தமிழ்ப் புத்தாண்டு தொடர்பாக தமிழகத்தில் விவாதம் எழுந்திருக்கும் நிலையில், திமுக தை முதல் நாளே புத்தாண்டு என கூறி வருகிறது. தமிழ்நாடு நாள் தொடர்பாக விஜய் மாற்றுக் கருத்தை கொண்டிருக்கும், நிலையில் தமிழ்ப் புத்தாண்டு தொடர்பாக விஜய் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளது கவனிக்கத்தக்கது.
தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட இருக்கிறது. உலகில் எந்த மூலையில் இருந்தாலும் சொந்த ஊரில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவது என்பது அனைவரும் தவறாமல் செய்து வரும் ஒரு விஷயம்.

இந்த நிலையில் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொங்கல் என்றாலே மண்பானையில் பொங்கல் வைத்து கடவுளுக்கு படையெடுத்து வழிபடுவது வழக்கம்.
நடிகர் விஜய்:
இதனையொட்டி தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பொங்கல் வாழ்த்துகளை கூறி வருகின்றனர். அந்த வகையில், நடிகரும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"பொங்கல் திருநாள்! உலகமே போற்றி வணங்கும் உழவர் திருக்கூட்டத்தின் ஒப்பற்ற கொண்டாட்டத் திருநாள். கால்நடைகள் நன்மதிப்புப் பெறும் நன்றித் திருநாள். காளைகள் திமில் நிமிர்த்திக் களம் காணும் வீரத் திருநாள்.
புத்தாண்டு வாழ்த்து:
2026இல் உண்மையான சமூக நீதி, உண்மையான சம நீதி, உண்மையான சமத்துவம், உண்மையான அமைதி, உண்மையான பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றுடன் பொதுமக்கள் பாதுகாப்பு நிரந்தரமாக, மகிழ்ச்சி நிலைபெற, நம் அனைவருக்குமான நல்லாட்சி லட்சியம் நிறைவேற, அதற்கான முன்னோட்டமாய் 2025ஆம் ஆண்டின் தைத்திருநாளில் பொங்கட்டும் வெற்றிப் பொங்கல். பொங்கலோ பொங்கல்! இந்தத் தமிழர் திருநாளில் தமிழகம் தலைநிமிர உறுதி ஏற்போம். அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!" என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்ப் புத்தாண்டு விவாதம்:
தை முதல் நாள் தமிழ் புத்தாண்டா அல்லது சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டா என்பது ஒவ்வொரு ஆண்டும் மிகப்பெரும் விவாதத்துக்கு உள்ளாகும் தலைப்பு. 2008ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு என்பது 'தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு' என்று அரசாணை வெளியிட்டு அறிவித்தது. பின்னர் வந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு அதனைத் திரும்பப்பெற்று சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவித்தது.
திமுக ஆதரவு? :
நித்திரையில் இருக்கும் தமிழா! சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு என்ற பாரதிதாசனின் வரிகளைக் குறிப்பிட்டு திமுக தை முதல் நாளையே புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என கூறி வருகிறது. இந்த நிலையில், நடிகர் விஜய் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு எனக் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு நாள்:
சென்னை மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு என பெயர் மாற்ற 1968 ஜூலை 18 ஆம் தேதி அன்றைய முதல்வர் அண்ணா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். அதன்படி ஜூலை 18 ஆம் தேதியே தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என 2022 ஆம் ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, ஜூலை 18 ஆம் தேதியன்று தமிழ்நாடு அரசு சார்பில் தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், மொழிவாரி மாகாணங்களாக பிரிக்கப்பட்டு தமிழர்களுக்கு தனி மாநிலம் உருவாக்கப்பட்ட நாளான நவம்பர் 1 தான் தமிழ்நாடு தின வாழ்த்துகளை தவெக தலைவர் விஜய் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications